கடந்த ஏப்ரல் மாதம், ஆதர்ஷ் ஐயர் என்பவர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதில்,
“ரெய்டு என்று மிரட்டி தொழிலதிபர்களிடம் இருந்து நிர்மலா சீதாராமன், ஜெ.பி.நட்டா, கர்நாடகா முன்னாள் பாஜக தலைவர் கட்டீல், பாஜக தலைவர்கள், அமலாக்கத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் தேர்தல் பத்திரம் மூலம் சுமார் ரூ.8,000 கோடிக்கு மேல் பணம் பெற்றுள்ளனர்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தப்போது, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட புகார் கொடுக்கப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிய சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையொட்டி, கடந்த செப்டம்பர் மாதம் பெங்களூரு திலகர் நகர் போலீஸ் நிலையத்தில் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் நிர்மலா சீதாராமன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் நேற்று கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு குறித்து கட்டீல் தரப்பில், “இது அரசியல் நோக்கத்திற்காக பொய்யாக புனையப்பட்ட வழக்கு” என்று கூறப்பட்டது.
ஆதர்ஷ் ஐயர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூசண், “ஆளும் கட்சியால் மிரட்டி தேர்தல் பத்திரம் மூலம் இவ்வளவு பெரிய தொகையை பெற முடியும் என்றால், அது தேர்தல் அரசியலை குழைக்கிறது. அமலாக்கத்துறை முற்றிலும் மத்திய அரசின் கீழ் உள்ளது” என்று வாதாடினார்.
இவரை எதிர்த்து வாதாடிய சீனியர் வழக்கறிஞர் கே.ஜி. ராகவன், “மிரட்டலால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுகிற யாரும் நீதிமன்றத்திற்கு வரவில்லை. மேலும், மனுதாரர் பாதிக்கப்பட்டவர் அல்ல” என்று வாதாடினார்.
இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நாகபிரசன்னா, “தீர்ப்பு ஒத்திவைக்கப்படுகிறது. இறுதி தீர்ப்பு வரும் வரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை” என்று கூறியுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டினது பென்னி குயிக்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். ஆனா அதுக்குப் பின்னாடி இருக்க காரணங்கள் உங்களுக்கு தெரியுமா? பிரிட்டிஷார் ஏன் அந்த அணையைக் கட்டுனாங்க… எப்படி அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தாங்க… ஏன் 999 வருஷத்துக்கு நிலத்தைக் குத்தகைக்கு எடுத்தாங்க… இப்படிப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கான பதில்களையும் வரலாற்றையும் சுவாரஸ்யமாக சொல்லும் நாவல்தான் ஆனந்த விகடனில் வெளியான நீரதிகாரம்.
இப்போது அது விகடன் Play-ல் ஆடியோ புத்தகமாக!
இப்பவே விகடன் App-ஐ இன்ஸ்டால் பண்ணுங்க. நீரதிகாரம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஆடியோ புத்தகங்களை இலவசமா கேட்டு என்ஜாய் பண்ணுங்க!