இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் LIC-யின் இணைய தளத்தின் முகப்புப் பக்கம் இதுவரை ஆங்கில மொழியில் இருந்த நிலையில் இப்போது இந்தியில் மாற்றப்பட்டுள்ளது.
“இது பிற மொழி பேசும் மக்கள் மீதான இந்தித் திணிப்பு. எல்.ஐ.சி-யின் இந்த இந்தித் திணிப்பு முயற்சி கடுமையாக கண்டிக்கத்தக்கது எனப் பலரும் இந்த செயலுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினும் LICயின் இந்தச் செயலுக்கு கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில், ” LIC இணையதளம் இந்தித் திணிப்பிற்கான கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலத்திற்கு மாற்றினாலும் இந்திலேயே தோன்றுகிறது. இந்தியாவின் பன்முகத்தன்மை மீது வலுக்கட்டாயமாக ஒற்றை மொழியை திணிக்கும் செயல் இது. எந்த தைரியத்தில் LIC இப்படி பெரும்பான்மை இந்திய மக்களுக்கு துரோகம் இழைக்கிறது? மொழிக் கொடுங்கோன்மையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்” என்று பதிவிட்டிருக்கிறார்.
The LIC website has been reduced to a propaganda tool for Hindi imposition. Even the option to select English is displayed in Hindi!
This is nothing but cultural and language imposition by force, trampling on India’s diversity. LIC grew with the patronage of all Indians. How… pic.twitter.com/BxHzj28aaX
— M.K.Stalin (@mkstalin) November 19, 2024
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
https://bit.ly/SeenuRamasamyKavithaigal
