கடந்த செப்டம்பர் 21-ம் தேதி இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற்றது.
அதில், தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி சார்பில் போட்டியிட்ட அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்று அதிபரானார். அனுராவின் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு 3 எம்.பிக்கள் மட்டுமே உள்ள நிலையில், புதிய சட்டங்களை நிறைவேற்ற பெரும்பான்மை பலம் வேண்டும் என்பதால் நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தல் நடத்த உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தின் 225 இடங்களுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் வாக்குப் பதிவு நேற்று (14.11.2024) நடைபெற்றது. அநுர குமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி, சஜித் பிரேமதாச, ரணில் விக்ரமசிங்க, மகிந்த ராஜபக்ச ஆகியோரின் கட்சிகளும் தேர்தலில் போட்டியிட்டிருந்தனர்.
உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டது. மொத்தமுள்ள 225 இடங்களில் 159 இடங்களை வென்று அதிபர் அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கட்சி தனிப்பெரும்பான்மையுடன் அபார வெற்றி பெற்றிருக்கிறது.
පුනරුද යුගය ඇරඹීමට උරදුන් සැමට ස්තූතියි!
மறுமலர்ச்சி யுகத்தை ஆரம்பிக்க தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி!
Thank you to all who voted for a renaissance!— Anura Kumara Dissanayake (@anuradisanayake) November 15, 2024
” மறுமலர்ச்சி யுகத்தை ஆரம்பிக்க தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி. தனது என்.பி.பி கட்சிக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி” என்று இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க மக்களுக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றையும் பதிவிட்டிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal
