இன்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியில் இருக்கிறதென்றால், அதில் பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி உருவாவதற்கு அடித்தளமிட்ட நிதிஷ் குமார், பாதியிலேயே அதிலிருந்து விலகி இனி செத்தாலும் யாருடன் கூட்டணி இல்லை என்றாரோ அதே பா.ஜ.க-வுடன் மீண்டும் கூட்டணி வைத்தார்.

லோக் சபா தேர்தல் முடிவில் பாஜக 240 இடங்கள் மட்டுமே பெற்று தனிப்பெரும்பான்மையை இழக்க, தெலங்கானாவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 16 இடங்களையும், பீகாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களையும் பெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றியை உறுதிசெய்தனர். அதைத்தொடர்ந்து, மோடி அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளத்துக்கு ஒரு கேபினெட் அமைச்சர் பதவியும், ஒரு மத்திய இணையமைச்சர் பதவியும் ஒதுக்கப்பட்டது.
இன்றைக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் முக்கிய இடத்தில் இருக்கிறார் நிதிஷ் குமார். இந்த நிலையில், பீகாரில் நேற்று நடைபெற்ற எய்ம்ஸ் அடிக்கல் அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில், பிரதமர் மோடியின் காலில் நிதிஷ் விழச் சென்றது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது. அந்த வீடியோவில், மேடைக்கு வரும் நிதிஷ் குமார், நேராக மோடியை நோக்கிச் சென்று அவரின் காலில் விழா குனிந்தார். அப்போது, மோடி அவரை பாதியிலே தாங்கி கைகுலுக்கி தனது அருகில் அமரவைத்தார்.

பின்னர், மேடையில் நிதிஷ் குமாரைப் புகழ்ந்த மோடி, “ஜங்கிள் ராஜ்ஜியம் சகாப்தத்திலிருந்து மாநிலத்தையே வெளிக்கொண்டுவந்திருக்கிறார் நிதிஷ் குமார். அதற்காக அவரை எவ்வளவு பாராட்டினாலும் அது மிகையாகாது. பீகார் பல வளர்ச்சிகளைக் கண்டு வருகிறது. மக்கள் நலனில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு உறுதியாக இருக்கிறது. பீகாரில் இதற்கு முன் இருந்த அரசு சுகாதார உள்கட்டமைப்பு பற்றி கவலைப்படவில்லை. ஆனால், நிதிஷ் குமார் ஆட்சிக்கு வந்த பிறகு நிலைமை மேம்பட்டிருக்கிறது.” என்றார்.
நிதிஷ் குமார் இவ்வாறு மோடியின் காலில் விழச் செல்வது இதுவொன்றும் முதல்முறையல்ல. லோக் சபா தேர்தல் வெற்றிக்குப் பின்னர் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நிகழ்ச்சியில் இதுபோலவே மோடியின் காலில் நிதிஷ் குமார் விழச் சென்றார். அப்போது, பிரசாந்த் கிஷோர் போன்றோர் நிதிஷ் குமாரை விமர்சித்தனர்.
CM Nitish Kumar and PM Narendra Modi – This time in Darbhanga, though pic.twitter.com/FTaAdFbYu0
— Arun Kumar (@ArunkrHt) November 13, 2024
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb