வயநாடு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (நவம்பர் 13) காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கேரள மாநிலத்தின் 7 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது வயநாடு நாடாளுமன்றத் தொகுதி. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
நிலச்சரிவு பாதிப்பில் உயிர் பிழைத்த சூரல் மலை, முண்டகை, வெள்ளரி மலை, அட்ட மலை, புஞ்சிரி மட்டம் பகுதி மக்களை வயநாட்டின் பல பகுதிகளில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் வாக்களிக்கும் வகையில் சூரல் மலை மற்றும் மேப்பாடியில் சிறப்பு மையங்களை அமைத்துள்ளனர். கேரள அரசின் போக்குவரத்துக் கழகம் மூலம் இலவச போக்குவரத்து சேவையும் இன்று வழங்கப்பட்டுள்ளது. பல பகுதிகளிலிருந்தும் சூரல் மலை மற்றும் மேப்பாடி மையத்திற்கு வந்து வாக்களித்துச் செல்கின்றனர். அந்த மக்களுக்கு ரோஜா பூக்கள் கொடுத்து வரவேற்பு அளித்து வருகின்றனர். பல மாதங்கள் கழித்துச் சந்தித்துக் கொண்ட மக்கள் வாக்கு மையத்தில் ஒருவரையொருவர் கண்ணீர் மல்க ஆரத்தழுவிக் கொண்டனர்.








இது குறித்துத் தெரிவித்த சூரல் மலை மக்கள், “ஜாதி, மதம் வேற்றுமை இல்லாமல் ஒருதாய் பிள்ளைகளாக இந்த ஊரில் சந்தோசமாக வாழ்ந்து வந்தோம். உறவுகளையும், உடைமைகளையும் கண்முன்னே நிலச்சரிவில் இழுத்துவிட்டுத் தவிக்கிறோம். உயிர் தப்பியதே பெரிய விஷயமாக இருக்கிறது. ஒரே ஊரில் வாழ்ந்த நாங்கள் ஆளுக்கொரு திசையில் சிதறிக் கிடக்கிறோம். உயிர் பிழைத்தவர்களைப் பார்க்கலாம் பேசலாம் என்ற ஆசையில்தான் வாக்களிக்க வந்தோம்” எனக் கண்ணீர் மல்கத் தெரிவித்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs