டாக்டர் அம்பேத்கர்… இந்தியாவுக்கே ஒளிவீசும் அறிவுச் சூரியனாக இருந்தவர். நமக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்கச் செய்த அரசியல் சாசனத்தை வடிவமைத்தவர். தொழிலாளர்களுக்கு 8 மணிநேர வேலை கிடைக்கக் காரணமாக இருந்தவர். தொழிற்சங்கம் வைத்துக்கொள்ளும் உரிமையைப் பெற்றுத் தந்தவர். வேலைவாய்ப்பு அலுவலகம் உருவாகக் காரணமாக இருந்தவர்.

பெண்களுக்கு மகப்பேறு விடுப்பும், ஆண்களுக்கு இணையான ஊதியமும் கிடைக்கக் காரணமாக இருந்தவர். இந்தியாவில் ரிசர்வ் வங்கி அமைய அடித்தளம் இட்டவர். பொதுத்துறை நிறுவனங்கள் பற்றிப் பெருங்கனவு கண்டவர். மின்சாரத்தை எல்லோருக்கும் பயன்படும் வசதியாக மாற்றியவர். நீர்ப்பாசனத் திட்டங்களை வடிவமைத்தவர். தலித்துகள், பழங்குடியினர் போலவே பிற்படுத்தப்பட்டோரும் இடஒதுக்கீடு பெற வேண்டும் என்று போராடியவர். பெண்களின் சொத்துரிமைக்காகப் போராடி அதற்காகவே தன் மத்திய அமைச்சர் பதவியைத் துறந்தவர். ஆம், அவர் எல்லோருக்குமானவர்.
அந்த மகத்தான ஆளுமையின் அத்தனை பரிமாணங்களையும் பேசும் முழுமையான தொகுப்பு நூல், `எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’. விகடன் பிரசுரமும், Voice of Common நிறுவனமும் இணைந்து வெளியிடும் இந்தப் புத்தகத்தின் முன்பதிவு இன்று முதல் தொடங்கியிருக்கிறது. அறிமுகச் சலுகையாக, ரூ. 999-க்கு புத்தகம் விற்பனை செய்யப்படுகிறது. இந்தச் சலுகை நவம்பர் 30 வரை இருக்கும்.

ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்ய, https://books.vikatan.com/ இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும். தொலைபேசி வழியாக முன்பதிவு செய்ய, 8056046940, 9789977823, 9500068144 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ளவும்.
முன்பதிவு செய்யப்பட்ட புத்தகங்கள் டிசம்பர் 6 முதல் அனுப்பிவைக்கப்படும். தமிழ்நாட்டுக்குள் தபால் செலவு இலவசம். பிற மாநிலங்களில் தபால் மூலம் பெற மொத்தமாக ரூ. 1099 ஆகும்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal
