பாஜக பொதுக்கூட்டத்தில் நடிகர் மிதுன் சக்ரவர்த்தியின் பர்ஸ் திருட்டுப் போனதா… நடந்தது என்ன?

நடிகரும் அரசியல்வாதியுமான மிதுன் சக்கரவர்த்தியின் பர்ஸ் (பணப்பை) திருடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பாஜக ஆதரவாளரான மிதுன் ஜார்கண்ட் மாநிலம் தான்பாத் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.

நிர்சா சட்டமன்ற தொகுதிக்காக அபர்ணா செங்குப்தா என்ற வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட போது பர்ஸ் திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பொதுக்கூட்டத்துக்குப் முன் மிதுன் சக்ரவர்த்தி ரோட்ஷோவில் கலந்துகொண்டார் அங்கு அவரைக் காண ரசிகர்கள் திரண்டிருந்தனர். அங்கிருந்து பிரசார மேடைக்கு வந்தபிறகே அவர் பர்ஸ் காணவில்லை என்பதை உணர்ந்துள்ளார்.

மிதுன் சக்ரவர்த்தி

மிதுன் சக்ரவர்த்தியின் பர்ஸ் திருடப்பட்டதாகக் கூறுவதை மறுத்துள்ளது பாஜக. பர்ஸ் தவறிவிடப்பட்டதாகவும் பின்னர் கண்டெடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

அந்த மாவட்ட பாஜக செயலாளர், “பிக்பாக்கெட் எதுவும் நடக்கவில்லை. பர்ஸ் தவறுதலாக வைக்கப்பட்டு பின்னர் கண்டெடுக்கப்பட்டது” என பிடிஐ தளத்தில் தெரிவித்துள்ளார்.

ஆனால், பொதுக்கூட்டத்தில் மிதுனின் பர்ஸ் களவாடப்பட்டதாக மைக்கில் அறிவிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது. “மிதுன்-டாவின் பர்ஸை யார் எடுத்திருந்தாலும், தயவு செய்து திருப்பிக்கொடுத்துவிடுங்கள். திருடுவது நிர்சாவின் கலாசாரம் கிடையாது” என பாஜகவைச் சேர்ந்த ஒருவர் மைக்கில் அறிவித்திருக்கிறார்.

இந்த ஆண்டுக்கான திரைத்துறையின் மிக உயர்ந்த விருதான தாதாசாகேப் பால்கே விருது மிதுன் சக்ரவர்திக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இன்று ஜார்கண்ட் மாநிலத்தில் முதல்கட்ட வாக்களிப்பு தொடங்கியிருக்கிறது. வரும் 20ம் தேதி இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நடைபெறும். 23ம் தேதி வாக்குகள் எண்ணப்பட இருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb