“நாம் தமிழர் தனித்தே போட்டியிடும்; என் பயணம் என் கால்களை நம்பியே உள்ளது” – சீமான்

தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வருகை தந்தார். அப்போது அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “தமிழக மீனவர்கள் சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன்பிடிக்கின்றனர்.

சீமான்

அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக்க கூறினார். ஏற்கெனவே இலங்கையில் தமிழர்களை சுட்டு கொன்றார்கள். வலைகளை கிழித்து எறிந்தார்கள். இதற்கு மேல் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள்? இதற்கு மேல் என்ன நடவடிக்கை உள்ளது?  தமிழ்நாட்டு மீனவர்கள் மட்டும்தான் எல்லை தாண்டி வருகிறார்களா? கேரள மீனவர்கள் வரவில்லையா?

வெளியுறவுத்துறை அமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர் நாட்டின் பிரதமர், தமிழக முதல்வர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய பெருங்கடல் என்றால் போதுமா? மீன் பிடிப்பதற்கு உரிமை இல்லையா? ஒரு சின்ன நாடு இலங்கை. இலங்கை மீது பொருளாதார தடை செய்ய வேண்டும். கட்சத்தீவை மீட்க வேண்டும்.

வரும் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான கட்டமைப்பு நடக்கிறது. நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும்.  என் பயணம் என் கால்களை நம்பியே உள்ளது.

சீமான்

அடுத்தவர்களின் கால்களை நம்பி பயணத்தை தொடங்கவில்லை. அனைத்து கட்சியும் என் பின்னால் ஓடி வருகிறார்கள். என் கொள்கை யாரோடும் ஒத்துப் போகவில்லை. வியாபாத்திற்காக கல்வி, மருத்துவத்தை தரம் குறைக்கிறார்கள். அவர்களுடன் எப்படி நாங்கள் சேர முடியும். அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஊழல் பட்டியல் ரெடி பண்ணுவோம் என்கிறார்.  தி.மு.கவும் அதைத்தான் சொல்கிறது. இது குரங்கு அப்பம் பிச்ச கதை போலத்தான் உள்ளது” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb