மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரத்தில் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். மாநில காங்கிரஸ் தலைவர் நானா பட்டோலே பா.ஜ.க-வைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அகோலாவில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசுகையில், “உங்களை நாய்கள் என்று அழைத்த பா.ஜ.கவிற்கா வாக்களிக்கப்போகிறீர்களா? அவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாகிவிட்டனர். எனவே அவர்களுக்கு எதிராக வாக்களித்து அவர்களை (பா.ஜ.க) நாய்களாக மாற்றும் நேரம் இது. பா.ஜ.கவிற்கு வாக்களிக்காதீர்கள். பா.ஜ.க இதர பிற்படுத்தப்பட்ட மக்களை மதிக்கவில்லை” என்று குறிப்பிட்டார். நானா பட்டோலேயின் கருத்துக்கு பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர். கிரித்சோமையா கூறுகையில், “மகாவிகாஷ் அகாடியில் ஒழுக்கம் குறைந்து வருகிறது. அவர்கள் ஏமாற்றத்திலிருந்து மனச்சோர்வுக்குச் செல்கிறார்கள். சரத்பவார் ஏதோ சொல்கிறார்; உத்தவ் தாக்கரே தேர்தல் ஆணையத்தைத் திட்டுகிறார்.

இப்போது, ராகுல் காந்தி பா.ஜ.க-வை ‘குட்டா’ என்று அழைக்கிறார். கருத்துக் கணிப்புகள் மஹாயுதிக்கு ஆதரவாகப் பெரும்பான்மையைக் காட்டுவதால் இது போன்று நடந்து கொள்கிறார்கள். அவர்களின் ஏமாற்றத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
பா.ஜ.க-வின் தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி இது குறித்து வெளியிட்டுள்ள சோசியல் மீடியா பதிவில், “காங்கிரஸ் கட்சியின் அவசர நிலை மனநிலையை இது காட்டுகிறது. காங்கிரஸ் கட்சியால் ஆட்சியமைக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டு இது போன்று மனவிரக்தியில் பேசுகிறார். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் அவர்களுக்கு எதிராகப் பேசுபவர்கள் மீது வழக்கு தொடருவார்கள்” என்றார்.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி கூட்டணியில் 103 தொகுதியில் போட்டியிடுகிறது. இதற்கிடையே சந்திராப்பூரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “மகாவிகாஷ் அரசு ஆட்சிக்கு வந்தால் வளர்ச்சித்திட்டங்கள் அப்படியே நின்றுவிடும். மகாவிகாஷ் அகாடி ஊழல் செய்வதில் மிகப்பெரிய கில்லாடிகள். வளர்ச்சித்திட்டங்களைத் தடுத்து நிறுத்துவதில் காங்கிரஸ் டாக்டர் பட்டம் பெற்று இருக்கிறது. விரைவான வளர்ச்சி வேண்டுமானால் மஹாயுதி கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுங்கள்” என்று குறிப்பிட்டார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb