Kerala: `இந்து மல்லு அதிகாரிகள்’ வாட்ஸ்அப் குரூப்… சர்ச்சையில் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்!

கேரள மாநிலத்தின் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குனர் கே.கோபாலகிருஷ்ணன், வேளாண் மேம்பாடு மற்றும் விவசாயிகள் நலத் துறையின் சிறப்புச் செயலர் என் பிரசாந்த் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக வெளியான செய்தியில், 2013-ம் ஆண்டு பேட்ச் அதிகாரியான கோபாலகிருஷ்ணன், கடந்த மாதம் “மல்லு இந்து அதிகாரிகள்” என்ற வாட்ஸ்அப் குழுவை உருவாக்கியிருக்கிறார். அதில், பல மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் முக்கிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கேள்வி எழுப்பியதும், அந்தக் குழு டெலிட் செய்யப்பட்டது.

வாட்ஸ்அப் குரூப்

இந்த நிலையில், இந்து மல்லு அதிகாரிகள் வாட்ஸ் ஆப் குழு குறித்து பலரும் கோபால கிருஷ்ண்டணனிடம் எழுந்தப் புகாரின் அடிப்படையில், அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அப்போது அவர் “என் செல்போன் ஹேக் செய்யப்பட்டது” எனத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அவருடைய செல்போனை காவல்துறை அதிகாரிகள் தடயவியல் சோதனைக்கு உட்படுத்தினர். அதில், செல்போன் ஹேக் செய்யப்பட்டதற்காக அறிகுறிகள் இல்லை என்பது தெரியவந்தது. மேலும், செல்போன் ரிசெட் செய்யப்பட்டதால், ஹேக் செய்யப்பட்டது தொடர்பாக உறுதியான தகவல்கள் இல்லை எனவும் கூறப்பட்டது.

அதைத் தொடர்ந்து, ஐ.ஏ.எஸ் அதிகாரியான கோபாலகிருஷ்ணனை கேரள முதல்வர் பினராயி விஜயன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறார்.

2007-ம் ஆண்டு பேட்ச் அதிகாரி என் பிரசாந்த், கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயதிலக்கின் கண்ணியத்தை குறைக்கும் வகையில், முகநூல் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அது தொடர்பான விவகாரம் சர்ச்சையான நிலையில், அவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88