இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹாமஸ் குழுவுக்கு இடையே 13 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் போரில், இதுவரை குறைந்தது 43,550-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் கடந்த சனிக்கிழமை தெரிவித்தது.
தற்போதுவரை போர் தொடர்வதால் அந்த எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம். இந்நிலையில், நேற்று (நவம்பர் 11) சௌதி அரேபியா நாட்டில் தலைநகர் ரியாத்தில் அரபு லீக்கும், இஸ்லாமிய மாநாடு அமைப்பும் இணைந்து கூட்டு உச்சி மாநாடு நடத்தியது. இதில் பல்வேறு நாட்டின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த மாநாட்டில் உரையாற்றிய சவூதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான், “எங்கள் பாலஸ்தீனிய சகோதர மக்களுக்கு எதிராக இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகளும், லெபனானில் நடத்தப்படும் ஆக்கிரமிப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தப் போர் இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலை என்பதை மீண்டும் உரக்கக் கூறுகிறோம். இந்தப் போரின் விளைவாக 1,50,000 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். காயமடைந்திருக்கிறார்கள். காணாமல் போயிருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள்.
இந்தப் போர் தொடங்கியபோதே இரு நாடுகளுக்கு மத்தியில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வலியுறுத்தினோம். எங்களுடைய வளைகுடா நாடுகளுடன் இஸ்ரேல் வெளிப்படையான உறவை முறைப்படுத்த முனைவதாக ஊகங்கள் வெளியாகின. அல் அக்ஸா இருக்கும் கிழக்கு ஜெருசலமை தலைநகரமாகக் கொண்டு, பாலஸ்தீன் அரசை நிறுவாதவரை, இது நடக்காது. பாலஸ்தீனம் மற்றும் லெபனான் மீதான ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்துவதற்கும், இரான் இஸ்லாமியக் குடியரசின் இறையாண்மைக்கு மதிப்பளித்து, போரைத் தொடராமல் இருக்க இஸ்ரேலைக் கட்டாயப்படுத்த வேண்டும். இதற்குச் சர்வதேச சமூகம்தான் பொறுப்பேற்க வேண்டும்.” என உரையாற்றினார்.
அவரைத் தொடர்ந்து உரையாற்றிய பாலஸ்தீனிய அதிகாரச் சபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸ், “இஸ்ரேல் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கவும், ஒரு வருடத்திற்குள் இஸ்ரேல் ஆக்கிரமித்திருக்கும் பகுதிகளில் குடியேற்றங்களை விரிவாக்கவும் வேண்டும் என்று கோரிக்கையாக வைக்கிறேன்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs