Manipur: 3வது நாளாக வன்முறை… CRPF – குக்கி படைகள் மோதல்.. துப்பாக்கி சூட்டில் 11 பேர் பலி!

மணிப்பூரின் ஜிரிபம் பகுதியில் சி.ஆர்.பி.எஃப் காவலர்கள் – குக்கி ஆயுத குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் குறைந்தது 11 குக்கி மக்கள் இறந்திருக்கலாம் என செய்திகள் வெளியாகியிருக்கிறது.

திங்கள் கிழமை பிற்பகல் 3:30 மணியளவில் குக்கி வீரர்கள் சி.ஆர்.பி.எஃப் முகாமை தாக்கியதாகவும், அதற்கு பதிலடி கொடுத்த சி.ஆர்.பி.எஃப் காவலர்கள் பத்துக்கும் மேற்பட்ட குக்கி வீரர்களை சுட்டு வீழ்த்தியதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர்களிடம் இருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நடைபெற்ற மோதலில் சி.ஆர்.பி.எஃப் காவலர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக இன்று, குக்கி ஆயுதக் குழு பொரோபெக்ரா காவல்நிலையத்தில் தாக்குதல் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. மணிப்பூரில் கடந்த 3 நாள்களாக மீண்டும் வன்முறை வெடித்திருக்கிறது. குக்கி ஆயுதக் குழுக்கள் வயல்களில் தாக்குதல் நடத்துவதாகக் கூறப்படுகிறது.

ஞாயிற்றுக் கிழமை இம்பால் கிழக்கு மாவட்டத்தில் குக்கி ஆயுத குழுவுடன் ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் மஹர் ரெஜிமெண்டைச் சேர்ந்த ஒரு வீரருக்கு லேசான குண்டடி காயம் ஏற்பட்டிருக்கிறது.

இந்த சண்டையில் இம்பால் காவல்துறையினர், 4-வது மஹர் ரெஜிமெண்ட் வீரர், எல்லைப் பாதுகாப்பு படையில் 119-வது பட்டாலியன் இணைந்து 40 நிமிடம் துப்பாக்கி சண்டை நடத்தியிருக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb