மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுவில் பணி.
என்ன பணி?
மாற்றுத்திறனாளிகள் நல துறையின் கீழ், வடசென்னை மாவட்டத்திற்கு மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது. அதில் மாற்றுதிறனாளிகளின் பிரதிநிதி பணி.

குறிப்பு: இந்தப் பணிக்கு மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்களில் மாற்றுதிறனாளிகள் நல பிரதிநிதிகளாக பார்வையற்றோர், காது கேளாத மற்றும் வாய் பேச இயலாதோர், கை, கால்கள் பாதிக்கப்பட்டோர், மனவளர்ச்சி குன்றியோர், புற உலக சிந்தனையற்றோர், பல்வகை பாதிக்கப்பட்ட மாற்றுதிறனாளிகள் ஆகியோரும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க தகவல் தொடர்பு கொள்ள: மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், வடசென்னை.
தொலைப்பேசி எண்: 044 29993612.