“அதிகமாக டிரோல் செய்யப்பட்ட நீதிபதி நானாகத்தான் இருப்பேன்..!” – தலைமை நீதிபதி சந்திரசூட் கலகல

இந்தியாவின் 50-வது தலைமை நீதிபதியாக இருந்த சந்திரசூட்டின் கடைசி பணி நாளான நேற்று உச்ச நீதிமன்றத்தில் இருந்து விடை பெற்றார்.

புதிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா நவம்பர் 11-ல் பதவி ஏற்க இருக்கிறார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற பிரிவு உபசரிப்பு விழாவில் பேசிய சந்திரசூட், ” என்னைத் தொடர்ந்து வழி நடத்துவது எது என்று கேட்டீர்கள். இந்த நீதிமன்றம்தான் என்னைத் தொடர்ந்து வழி நடத்த வைத்தது. தேவையில் இருப்பவர்களுக்கும், நீங்கள் சந்திக்காதவர்களுக்கும், உங்களுக்குத் தெரியாத நபர்களுக்கும், அவர்களைப் பார்க்காமலேயே உங்கள் வாழ்க்கையை பாதிக்கும் திறன் கொண்டவர்களுக்கும் சேவை செய்வதை விட மேலான உணர்வு வேறு எதுவும் கிடையாது.

தலைமை நீதிபதி சந்திரசூட்

இளம் சட்ட மாணவராக இந்த நீதிமன்றத்தின் கடைசி வரிசையில் அமர்ந்தது முதல் இப்போது தலைமை நீதிபதியாக பதவி வகித்தது வரை பல நினைவுகள் என் நெஞ்சில் நிழலாடுகின்றன. நாட்டிற்குச் சேவையாற்றுவதற்கான மகத்தான பாக்கியம் எனக்கு கிடைத்தது. நீதிமன்றத்தில் செலவழிக்கும் ஒவ்வொரு நாளும் சட்ட அறிவு மற்றும் தனிப்பட்ட நுண்ணறிவு இரண்டையும் கற்றுக் கொள்ளவும் வளரவும் ஒரு வாய்ப்பாக அமைந்தது.

நாங்கள் இங்கு நீதியை நிலைநாட்டுகிறோம். இருப்பினும் தற்செயலான தவறுகள் அல்லது தவறான புரிதல் அடிப்படையில் நான் யாரையும் புண்படுத்தியிருந்தால், நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் ” என்று கூறியிருக்கிறார்.

நீதிபதி சந்திரசூட்

தொடர்ந்து பேசிய அவர், “வரலாற்றிலேயே அதிகம் டிரோல் செய்யப்பட்ட நீதிபதி நானாகத்தான் இருப்பேன் என நினைக்கிறேன். திங்கள்கிழமை முதல் அவர்கள் என்ன செய்வார்கள் என்று யோசனையாக உள்ளது. என்னை டிரோல் செய்த எல்லோருக்கும் வேலை இல்லாமல் போய்விடுமே” என்று கடைசியில் நகைச்சுவையாகப் பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs