அமெரிக்க வல்லரசின் அதிபராக இரண்டாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் டொனால்ட் ட்ரம்ப். தேர்தல் பிரசாரங்களின் போதே டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்ய இரண்டு கொலை முயற்சிகள் நடைபெற்றது. இந்த நிலையில் அவரது வீட்டின் முன் ரோபோ நாய் ஒன்று காவலில் ஈடுபடும் வீடியோ வைரலாகி வருகிறது.
ட்ரம்ப்பின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. ஃப்ளோரிடாவின் பாம் பீச் (Palm Beach) பகுதியில் அவர் தங்கியிருக்கும் மார்-ஏ-லாகோ ரெசார்டுக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய அதிகாரிகள் காவல் இருக்கின்றனர். அருகில் உள்ள கடற்கரையில் ஆயுதங்கள் பொருத்தப்பட்ட போட் மற்றும் இதன் பகுதியாக அமெரிக்காவின் சட்ட அமலாக்கத்துறையால் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் ரோபோடிக் நாயும் இணைந்துள்ளது.
ட்ரம்ப் இதுவரை பதவியேற்கவில்லை. தேர்வு செய்யப்பட்ட அதிபராக இருக்கிறார். ஜனவரி 20 தேதி நடக்கும் பதவியேற்பு விழாவில் அதிபருக்கான பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார். இப்போது ட்ரம்ப்புக்கு அமெரிக்காவின் சீக்ரட் சர்வீஸ் அமைப்பு பாதுகாப்பு வழங்கி வருகிறது. அதிபர், துணை அதிபர் மற்றும் முன்னாள் அதிபர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது இந்த அமைப்பின் கடமை.
பிபிசி செய்திதளம் கூறுவதன்படி, அதிபர் மற்றும் துணை அதிபரை பாதுகாப்பதில் 300 ஏஜெண்ட்கள் செயல்படுவர். முன்னாள் அதிபர் மற்றும் துணை அதிபரை பாதுகாப்பதில் 90 முதல் 100 ஏஜெண்ட்கள் பங்குபெறுவர்.
கடந்த ஆண்டு முதலே அமெரிக்காவின் பாதுகாப்புப் படை தளங்களில் ரோபோடிக் நாய்கள் மற்றும் பிற ஆயுதம் பொருந்திய தானியங்கி வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ராக்கெட் லான்சர் உள்ளிட்ட பெரிய ஆயுதங்கள் பொருத்தப்படும் ரோபோ நாய்களை அமெரிக்க பாதுகாப்புப்படை சோதனைக்கு உட்படுத்தி வருகிறது. இவற்றில் ஏ.ஐ தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படுகிறது.
அமெரிக்க நாட்டின் எல்லையில் ஊடுறுவல்காரர்கள் வருவதைத் தடுக்கவும் இந்த நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன.
“We have robot dogs, very efficient dogs. Very clean too. They could take you down in a second, trust me.”
pic.twitter.com/G98OmvdJtm— (@serialtw_tter) November 8, 2024
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb