நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறை அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவரின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தவர்களில் மிக முக்கியமானவர் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்.
அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தேர்தல் பிரசாரத்தின் போது, “அமெரிக்க அதிபராக நான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் , டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்குக்கு கேபினட் அமைச்சர் பதவியோ அல்லது வெள்ளை மாளிகையின் ஆலோசகர் பதவியோ வழங்கப்படும்” என அறிவித்தார்.
ட்ரம்ப் அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில், “நான் சேவை செய்யத் தயாராக இருக்கிறேன்” என எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார்.
இந்த நிலையில், அதிபராக தேர்வு செய்யப்பட்ட டொனால்ட் ட்ரம்புக்கு வாழ்த்து சொல்லும் விதமாக, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ட்ரம்பிடம் பேசினார். அந்த அழைப்பில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்-கும் இருந்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. அந்த அழைப்பு சுமார் 25 நிமிடங்கள் நீண்டதாக கூறப்படுகிறது.
மேலும், அந்த உரையாடலில், உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா உக்ரையுடன் நிற்கும் என அதிபர் ட்ரம்ப் உறுதியளித்ததாகவும், எலான் மஸ்க், Starlink செயற்கைக்கோள்கள் மூலம் உக்ரைனுக்கு உதவ முன்வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது, எலான் மஸ்க் சிறுக சிறுக அரசியலில் செல்வாக்கு செலுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவது கவனிக்கப்படுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
