சேலம்: காரில் சென்றவரை வழிமறித்து கொலை செய்த கும்பல்; பழிக்குப் பழி சம்பவமா என போலீஸ் விசாரணை

சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள வெள்ளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த சரவணன் (32) என்ற வாலிபர் பீரோ பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், இன்று (நவம்பர் 8) வழக்கம்போல் தனது பட்டறைக்கு கார் மூலமாகச் சென்று கொண்டிருந்தபோது, சேலம் வலசையூர் அருகே உள்ள பனங்காடு பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, மற்றொரு காரில் வந்த மர்ம கும்பல் காரை வழிமறித்து, சரவணனை வெளியே இழுத்து கத்தியால் குத்தியும், தலையை வெட்டியும் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு சம்பவ இடத்தை விட்டுத் தப்பியோடியது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாகத் தகவலறிந்து வந்த காரிப்பட்டி காவல்துறையினர் உடனடியாகச் சாலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சரவணனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகச் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சரவணன்
வெட்டி கொலை

மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக காரிப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலை செய்த கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு முன்பாக வீராணம் பகுதியைச் சேர்ந்த காட்டூர் ஆனந்த் என்ற பிரபல ரவுடி கொலை சம்பவம் தொடர்பாகச் சரவணனைக் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs