மதுரை: குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் யானைக்கல் சாலை… தூய்மையாக மாறுமா?

மதுரை யானைகல் அருகில் உள்ள சாலையில் வைகை ஆறு பக்கத்தில் குப்பைகள் கிடக்கும் நிலையில் அது அகற்றப்படாமல் உள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: ” பல நாள்களாக இங்குக் குப்பைகள் இருக்கின்றது. அகற்றுவதற்கு யாருமே வரவில்லை. இம்மழைக்காலத்தில் குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. குப்பைகள் போட்ட குப்பைத் தொட்டி நிரம்பி வழிகின்றது. அதனால் குப்பைகளை எங்குப் போடுவது என்று தெரியாமல் ஆங்காங்கே போடுவதால் அப்பகுதியே குப்பைக் கூளமாக காட்சியளிக்கின்றது.

குப்பைகள் அதிகமாகச் சேர்ந்து விட்டதால் அப்பகுதியைத் தாண்டி சென்றாலே மிகவும் துர்நாற்றம் வீசுகின்றது. இதனால் அப்பகுதியில் தாங்க முடியாத அழுகிய நாற்றம் வருகிறது. எனவே பணியாளர்கள் விரைந்து குப்பைகளை அகற்ற வேண்டும்” என்றனர்.

குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் யானைக்கல் சாலை

இது குறித்து அதிகாரி தரப்பில் கூறியதாவது, “தீபாவளி பண்டிகை தற்போது தான் முடிந்துள்ளது. மேலும் மழைக்காலம் என்பதால் தூய்மை பணி கடுமையாக உள்ளது. இங்கு மட்டும் இல்லாமல் மதுரையில் பல பகுதிகளிலும் குப்பைகள் அங்கங்கே கிடக்கின்றன. காரணம், மக்கள் சாலை ஓரங்களில் குப்பைகளை வீசி செல்கின்றனர். இதனால் அதை அகற்றச் சிரமமாக இருப்பதால் இந்த நிலை தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்கின்றது. இதனால் மழைக்காலங்களில் இன்னும் மோசமாக ஆகிவிடுகிறது. பணியாளர்கள் தினசரி அனைத்து குப்பைகளையும் இயன்றளவு அகற்றுகின்றனர். விரைவில் அப்பகுதியில் குப்பைகள் அகற்றத் தேவையான ஏற்பாடுகளைச் செய்கின்றோம்” என்று தெரிவித்துள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb