1964 முதல் இன்று வரை நடைபெற்ற தேர்தல்களில் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகள் பெற்ற இடங்கள் எத்தனை?
1972ம் ஆண்டு அதிபர் ரிச்சர்ட் நிக்ஸன் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையில் மிகப் பெரிய வித்தியாசம் இருந்துள்ளது. வெறும் 17 இடங்களை மட்டும் வென்று படுதோல்வி அடைந்தது ஜனநாயகக் கட்சி.
1980ல் ரொனால் ரீகன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது 49 இடங்களை மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார். 1984ம் ஆண்டு அவர் இரண்டாவது முறை ஆட்சியைப் பிடிக்கும்போது ஜனநாயக கட்சி 13 இடங்கள் மட்டுமே வென்றிருக்கிறது.

ட்ரம்ப் முன்னிலை பெறுகிறாரா?

அமெரிக்காவில் மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, நார்த் கரோலினா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகியவை அணி மாறும் மாகாணங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அதாவது, இந்த 7 மாகாணங்களின் மக்கள், ஒருமுறை குடியரசு கட்சிக்கும், மறுமுறை ஜனநாயக கட்சிக்கும் மாறி மாறி வாக்களித்து வருகின்றனர். இந்த மாகாணங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் ட்ரம்ப் முன்னிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சரிக்கு சரி போட்டி!
அமெரிக்காவின் தேர்தல் களம் இரண்டு கட்சிகளுக்கும் சாதகமில்லாமல் சரி நிகர் போட்டியாக உள்ளது. இந்த தேர்தலில் இரு கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவலாம் என்கிறார்கள்.
வாக்குப்பதிவு எப்போது?
உலக நாடுகள் உற்றுநோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. ஒவ்வொரு மாகாணங்களிலும் தேர்தல் நேரத்தில் வித்தியாசம் இருக்கலாம். எனினும் பொதுவாக இந்திய நேரப்படி இன்று மாலை 5:30 மணிக்குத் தொடங்கி மறுநாள் காலை 5:30 மணிக்கு முடிவடையும்.

வாக்கு எண்ணிக்கை?
வாக்குப்பதிவு முடிந்த உடனேயே மொத்தமுள்ள 50 மாகாணங்களிலும் வாக்கு எண்ணிக்கைத் தொடங்கிவிடும். எனினும் வாக்கு எண்ணிக்கை இந்தியாவில் உள்ளது போல் ஒரே நாளில் முடிவடையாது. போட்டு கடுமையாக இருக்கும் பட்சத்தில் முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாக 3 நாள்கள் முதல் ஒரு வாரம் வரையில் ஆகலாம் என்கிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY