US Election: இந்தி அல்ல… அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குச் சீட்டில் இடம்பெற்ற ஒரே இந்திய மொழி!

அமெரிக்க அதிபர் தேர்தலில், ஆளும் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான நாட்டின் தற்போதைய துணை அதிபர் கமலா, குடியரசுக் கட்சியின் வேட்பாளரான முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு கடும் போட்டியாளராக உருவெடுத்திருக்கிறார். காரணம், அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக அந்நாடு ஒரு பெண் அதிபரைப் பெறக்கூடிய சூழல், இந்தத் தேர்தலால் மீண்டும் உருவாகியிருக்கிறது.

கமலா ஹாரிஸ் vs டொனால்டு டிரம்ப்

அதேசமயம், ட்ரம்பும் அதிபராவதற்கான வாய்ப்பு சரிபாதியளவு நிலவுவதாகக் கூறப்படுகிறது. இத்தகைய பரபரப்பான சூழலில், அமெரிக்காவில் நாளை வாக்குப் பதிவு தொடங்கவிருக்கிறது. இந்தியா போன்ற நாடுகளை போலல்லாமல், வாக்குச் சீட்டு முறையில் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. இவ்வாறிருக்க, இந்த வாக்குச் சீட்டில் ஆங்கிலத்துடன் பிற நான்கு மொழிகளும் இடம்பெற்றிருக்கின்றன.

அதில், சீனம், ஸ்பானிஷ், கொரியன் மொழிகளுடன் இந்திய மொழியும் ஒன்று. ஆனால், அது இந்தி அல்ல, பெங்காலி மொழி. இது குறித்து பேசிய தேர்தல் வாரிய நிர்வாக இயக்கநர் மைக்கேல் ஜே ரியான், “மொழி அணுகல் பற்றி இங்கு ஒரு வழக்கு இருந்தது. உங்களுக்கே தெரியும், இந்தியாவில் பல்வேறு மொழிகள் இருக்கின்றன. அதில், ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகைக்கு ஆசிய இந்திய மொழி தேவைப்பட்டது. பின்னர், சில பேச்சுவார்த்தைகள் மூலம் அவர்கள் பெங்காலி மொழிக்கு வந்தனர். பெங்காலி தேர்வுக்கான வரம்புகளை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் அது ஒரு வழக்கிலிருந்து வந்தது.” என்று கூறினார்.

வெள்ளை மாளிகை

முன்னதாக, நியூயார்க்கின் குயின்ஸ் பகுதியிலுள்ள தெற்காசிய சமூகம் 2013-ல் பெங்காலியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட வாக்குச்சீட்டுகளைப் பெற்றனர். இது, தெற்காசிய சிறுபான்மையினருக்கு மொழி உதவி வழங்குவதற்கு, அந்நாட்டு அரசு வாக்களிக்கும் உரிமைச் சட்டம் 1965-ன் கீழ் உத்தரவிட்டுக் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பெங்காலி மொழி வாக்குச் சீட்டில் சேர்க்கப்பட்டது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb