Amaran: `கூடுதல் மகிழ்ச்சி…!’ கமல், ரெட் ஜெயின்ட் நிறுவனத்தை பாராட்டிய வானதி சீனிவாசன்!

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வானதி சீனிவாசன்

இருப்பினும் நிலம் முழுவதும் காலி செய்யப்பட்டு வழங்கப்படவில்லை. இதனால் பணிகளை தொடங்குவதில் சுணக்கம் இருக்கிறது. கோவை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து மத்திய அரசு கேட்கும் தகவல்களை மாநில அரசு உடனடியாக விரைந்து அனுப்ப வேண்டும்.

 வேற்றுமையில், ஒற்றுமை என்பது தான் பாஜகவின் லட்சியம். உணவு, மொழி சார்ந்து பாஜக மீது வைக்கப்படும் விமர்சனங்கள் உண்மையல்ல. ஒரே நாடு, ஒரே தேர்தலில் இருக்கக் கூடிய சாதக பாதகங்களை அரசியல் கட்சி யோசிக்க வேண்டும். அனைவரும் கூறுகிறார்கள் என்பதற்காக விஜய் உள்ளிட்டோர் இதை எதிர்க்க கூடாது. கோவையில் சாலைகள் சரியில்லை.

கோவை

ரூ.200 கோடிக்கு சாலை பணிகள் மேற்கொண்டதாக சொல்கிறார்கள். அதற்கான கணக்கை காட்ட வேண்டும். முதலமைச்சரின் வருகைக்காக இப்போது சில இடங்களில் சாலை போடுகிறார்கள்.  முதலமைச்சர் அடிக்கடி கோவை வர வேண்டும்.

தமிழ்நாட்டில் நீண்ட நாள்களுக்கு பிறகு தேசப்பற்றும் மிக்க திரைப்படமாக அமரன் வெளியாகியுள்ளது. படக் குழுவினருக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த படத்தை கமல்ஹாசன் தயாரித்து ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் விநியோகம் செய்தது  கூடுதல் மகிழ்ச்சி.

அமரன் திரைப்படம்

அமரன் திரைப்படத்தை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக திரையிட வேண்டும். மாநில முதல்வர் ரசித்த படத்தை தமிழகத்தின் மாணவ செல்வங்கள் ரசிக்க வேண்டும். அமரன் படத்துக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்.” என்றார். 

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY