Pawan kalyan: “சனாதன தர்மத்தைப் பாதுகாக்க புதிய குழு ஒன்று தொடங்கப்படும்…” -பவன் கல்யாண்

ஜனசேனா கட்சி தலைவரும், ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாண், சனாதன தர்மத்தைப் பாதுகாப்பதற்காக புதிய கட்சிப் பிரிவை உருவாக்குவதாக அறிவித்துள்ளது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

பவன் கல்யாண், திருப்பதி லட்டில் கலப்பட நெய் பயன்படுத்தப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டில் மிகுந்த ஆவேசமான கருத்துகளைப் பேசி, திருப்பதியின் புனிதத்தை பரிசுத்தம் செய்யப் பூஜைகளெல்லாம் நடத்தியது பெரும் பேசுபொருளாகியிருந்தது. இதையடுத்து “இந்தியாவில் உள்ள அனைத்து கோயில்களிலும் இதுபோன்ற பிரச்னைகளை ஆராயத் தேசிய அளவில் ‘சனாதன தர்ம ரக்ஷனா வாரியம்’ என்ற அமைப்பை நிறுவ வேண்டும்” என்று பேசியிருந்தார்.

உதயநிதி ஸ்டாலின், பவன் கல்யாண்

‘சனாதனத்தை அழிக்க முயன்றால் அழிந்து போவீர்கள்’ என பவன் கல்யாண் கூறியது மற்றொருமொரு சர்ச்சையைக் கிளப்ப, உதயநிதி ஸ்டாலின் அதற்கு ‘பொறுத்திருந்து பாருங்கள்…” என்று கவுன்டர் அடித்து பேசியதெல்லாம் அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் தற்போது பவன் கல்யாண், “சனாதன தர்மத்தைப் பாதுகாப்பதற்காக ஜனசேனா கட்சிக்குள் ‘நரசிம்ம வாராஹி படை’ புதிய அணியை தொடங்கவுள்ளோம். உலகிற்கே வழிகாட்டும் விளக்காக விளங்கும் சனாதன தர்மம் இல்லாமல் நம் நாடு இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

பவன் கல்யாண்

நாங்கள் தேவாலயங்கள் மற்றும் மசூதிகளை மதிக்கும் அதே சமயத்தில், இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் எந்தவொரு செயலுக்கும் விளைவுகள் ஏற்படும் என்பதையும் உறுதி செய்வோம்” என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb