தமிழக வெற்றிக் கழக மாநாடு நடந்து முடிந்ததிலிருந்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய் அரசியல் கொள்கை குறித்து கடுமையாக விமர்சித்து வருகிறார்.
அந்தவகையில், நாதக சார்பில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விஜய் குறித்து சீமான் பேசியது இணையத்தில் வைரலானது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சீமான், “திராவிடம் என்றால் என்ன என்று விஜய் விளக்குவாரா? தமிழ் தேசியம் என்றால் என்ன என்று விஜய் விளக்குவாறா? வில்லனும் நடிகரும் எப்படி ஒன்றாக முடியும். வில்லனை எதிர்த்தால்தான் அவர் நடிகர். சமீபத்தில் அவர் நடித்த கோட் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தையும், ஹீரோ கதாபாத்திரத்தையும் அவரே நடித்து இருப்பார்.

இதனால் தான் இப்படி பேசிவிட்டார் என்று நினைக்கிறேன். திராவிடமும், தமிழ் தேசியமும் வேறு வேறுதான். சமூக நீதியை பேசுகிறார் தம்பி விஜய். அதை திமுகவும்தான் பேசுகிறது. ஆனால், அதை பின்பற்றவில்லை. பாஜக மதவாதம் என்பதுபோல அவர் கருத்து தெரிவித்திருக்கிறார். அப்போது காங்கிரஸ் என்ன, மிதவாதமா? ஊழல் குற்றச்சாட்டுகள் உடைய ஆதிமுக ஆட்சியை ஏன் விஜய் விமர்சிக்கவில்லை? காங்கிரஸூம், அதிமுக-வும் உங்களுக்கு எதிரி இல்லையா?. மும்மொழிக் கொள்கை என்பது மோசடி கொள்கை, இரு மொழி கொள்கை என்பது ஏமாற்று கொள்கை. தமிழ் எங்கள் கொள்கை. தமிழ் பயிற்று மொழி, ஆங்கிலம் பயிற்று மொழி. ஆனால் வேண்டுமென்றால் பிற மொழிகளை கற்கலாம். தமிழக வெற்றிக் கழகத்தின் மொழிக்கொள்கை தவறாக இருக்கிறது. கொள்கையை மாற்றுங்கள் அல்லது எழுதி கொடுப்பவரை மாற்றுங்கள்.
எங்களைப் பொறுத்தவரை கொள்கை கோட்பாடுகளை தவிர குடும்ப உறவு முக்கியமில்ல. தம்பி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. நான் ஒவ்வொருமுறையும் சொல்வது குட்டிக்கதை அல்ல, வரலாறு. ஆந்திராவில் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது, மீனவர்கள் பிரச்னை போன்றவற்றில் விஜய்யின் நிலைப்பாடு என்ன? விஜய்யும் அண்ணன் திருமாவளவனும் ஒரே மேடையில் சந்திப்பதாக செய்திகள் வருகின்றன. தவெக-வும் விசிக-வும் எந்த நேரத்திலும் கூட்டணி அமைக்காது. அண்ணன் திருமாவளவன் சிறுபிள்ளைத்தனமான அந்த தவறை செய்யமாட்டார்.
அண்ணன் என்ன? தம்பி என்ன? ரத்த உறவை விட லட்சிய உறவுதான் மேலானது. குடும்ப உறவை விட கொள்கை உறவுதான் மேலானது” என்று தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து தவெக-வின் முதல் மாநாட்டிற்கு அதிகம் பேர் வந்தது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு சீமான், “கூட்டம் யாருக்கு வேண்டுமானாலும் வரும், நயன்தாரவுக்குகூட 4 லட்சம் பேர் கூடினார்கள். அரசியலில் விஜயகாந்துக்கு கூடாத கூட்டமா விஜய்க்கு கூடியது?” என்று பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs