மருத்துவமனையில் இறந்த கணவன்; ரத்தக் கறையை சுத்தம் செய்த கர்ப்பிணி; வெளியான அதிர்ச்சி வீடியோ!

மத்தியப் பிரதேச மாநிலம், திண்டோரி மாவட்டம், பழங்குடி மக்கள் அதிகம் வாழும் கிராமம் லால்பூர். இந்த கிராமத்தில் வசித்த சிவராஜ் என்பவருக்கும் அவரின் மற்ற இரண்டு சகோதரர்கள், தந்தைக்கு மத்தியில் சொத்து தொடர்பான பிரச்னை இருந்திருக்கிறது. கடந்த வியாழக்கிழமை அந்த சண்டையில் கைகலப்பு ஏற்பட்டு, துப்பாக்கிச்சூடும் நடத்திக்கொண்டதாக தெரிகிறது. இதில் சம்பவ இடத்திலேயே சிவராஜின் தந்தையும், ஒரு சகோதரரும் உயிரிழந்திருக்கின்றனர். சிவராஜ், அவரின் சகோதரர் ராம்ராஜ் ஆகியோர் கடும் காயங்களுடன் கடசரை பகுதி சுகாதார மையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றனர்.

அங்கு இருவருக்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. 5 மாத கர்ப்பிணியான சிவராஜின் மனைவி ரோஷ்னி, கணவன் உயிரைக் காப்பாற்ற கடுமையாகப் போராடிவந்திருக்கிறார். இந்த நிலையில், சிவராஜ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். கணவனை இழந்து நிற்கதியாக நின்ற அந்த ஐந்து மாத கர்ப்பிணியிடம் சிவராஜ் படுத்திருந்த படுக்கையில் இருந்த ரத்தத்தை சுத்தம் செய்துவிட்டு செல்லுமாறு மருத்துவமனை நிர்வாகம் கூறியிருக்கிறது. அதனால், கணவனை இழந்த துக்கத்தில் இருக்கும் ரோஷ்னி, அந்தப் படுக்கையை சுத்தம் செய்து அந்த குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடுகிறார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பலரும் மருத்துவமனை நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்து கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக விளக்கமளித்த மருத்துவமனை நிர்வாகம், “அந்தப் பெண்ணிடம் யாரும் சுத்தம்செய்யக் கூறவில்லை. இறந்தவரின் மனைவி படுக்கையில் இருந்து ரத்தத்தை ஒரு துணியால் துடைக்க அனுமதிக்குமாறு எங்களிடம் கேட்டார், அவர் அதை ஆதாரமாகப் பயன்படுத்தலாம் எனக் கருதி அனுமதித்தோம். நாங்களாகவே அவரை படுக்கையை சுத்தம் செய்யும்படி கேட்கவில்லை.” என விளக்கமளித்திருக்கிறது. இந்த விளக்கமும் நம்பும்படியாக இல்லை என சமூக வலைதளங்களில் மீண்டும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs