கூகுள் நிறுவனம் 20 பத்து கோடி டாலர் அபராதத்தொகையாக கட்ட வேண்டும் என்று ரஷ்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ‘என்னது ‘இருபது பத்து கோடியா’ தவறாக எழுதிவிட்டார்களோ?’ என்று நினைக்காதீர்கள். நீங்கள் படித்தது சரி தான். பத்து கோடியை ஆங்கிலத்தில் ‘டெசிலியன்’ என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது டெசிலியன் என்றால் ஒன்றுக்கு பின்னால் 33 ஜீரோக்கள் வரும்.
‘அத்தனை தொகையா…ஏன்…எதற்கு’ என்ற கேள்வி தோன்றுகிறதா? கடந்த 2022-ம் ஆண்டு ரஷ்ய – உக்ரைன் போர் தொடங்கியபோது, யூடியூப்பில் ரஷ்ய அரசு நடத்தி வந்த சேனல்களுக்கு, கூகுளின் தாய் நிறுவனம் மற்றும் யூடியூப்பின் தலைமை நிறுவனம் ஆல்பபெட் தடை விதித்தது. இந்த தடையை நீக்க கோரி தடை செய்யப்பட்ட நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்த சேனல்களின் தடை நீடிக்கும் ஒவ்வொரு நாளும் கூகுள் நிறுவனத்திற்கு 1,028 டாலர் அபராதம் விதித்தது. தீர்ப்பு வெளியான நாளில் இருந்து இப்போது வரை அபராதத் தொகையை கூட்டி பார்க்கும்போது, அபராதத் தொகை டெசிலியனை தொட்டுள்ளது.
உலகத்தில் உள்ள அத்தனை பணத்தை சேர்த்தாலும், இந்த அபராதத் தொகையை நெருங்க கூட முடியாது என்பது தான் இந்த விஷயத்தின் ஹைலைட்டே!
அம்மாடியோவ்வ்வ்வ்…