தவெக கட்சியின் முதல் மாநாடு சமீபத்தில் நடந்து முடிந்தது. அதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர். விழாவில் விஜய் ஆளும் கட்சியான திமுகவை விமர்சித்துப் பேசினார். அவர் கூறிய பல கருத்துகள் அரசியல்களத்தில் பேச்சுபொருளாகியிருக்கின்றன.
குறிப்பாக “ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு” என விஜய் பேசியது பல கட்சிகளில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இதற்கு எதிர்வினை ஆற்றியிருக்கின்றனர்.
திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி இதுகுறித்துக் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் பேசியதாவது,
திமுகவை தாக்கும் விஜய்!
“இதுவரை நிறைய பேர் அரசியலுக்கு வந்திருக்கின்றனர். 1973-ல் எம்.ஜி.ஆரையே பார்த்துவிட்டுதான் திமுக வந்திருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் எதற்கும் அஞ்சாத பனங்காட்டு நரி. எல்லா அரசியல் போராட்டங்களை சந்தித்திருக்கிறோம். 75 ஆண்டுகள் கடந்துள்ளோம் இன்னும் 100 ஆண்டு ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காக உழைக்கக்கூடிய இயக்கமாக இருக்கும். மக்களுக்காக போராடக்கூடிய தலைவராக தளபதிதான் இருப்பார். அரசியலுக்கு யார் வந்தாலும் எங்களுக்கு மகிழ்ச்சிதான். ஒருவர் அரசியல் கட்சி தொடங்குவதால் திமுகவுக்கு எந்த கஷ்டமும் கிடையாது. எங்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள்.
ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு?
எங்கள் இயக்கத்தின் தலைவர் கொள்கை திட்டங்களை வகுப்பார். நாங்கள் எத்தனை முறை ஆட்சிக்கு வந்திருக்கிறோம் என்பது உங்களுக்கேத் தெரியும். எங்களுடைய ஆட்சியில் எங்கள் கொள்கைகளை ஏற்றுக்கொண்டுள்ள கட்சிகள் எங்களோடு இருக்கின்றன. நாங்கள் அடிப்படையில் இணைந்து செயல்படும் இயக்கங்கள். அவர்கள் நிச்சயமாக பதவியை விரும்பவில்லை என்பது உங்களுக்கேத் தெரியும்.
இதுவரை 7 முறை ஆட்சி அமைத்திருக்கிறோம். எப்போதுமே கூட்டணி ஆட்சி என்பது இருந்ததில்லை. வருங்காலத்தில் என்ன நடக்கும் என்ற கொள்கை முடிவுகளை தலைவர் அறிவிப்பார்.” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb