TVK: விஜய் கட்சியின் முதல் மாநாடு – தேசிய ஊடகங்கள் சொல்வது என்ன?!

நேற்று முழுவதும் எந்தத் தமிழ் செய்தி சேனல்கள், வலைதளங்கள் பக்கம் திருப்பினாலும், சமூக வலைதளத்தை ஸ்க்ரால் செய்தாலும் ‘தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடும், விஜய்யும்’ தான் ஹாட் டாப்பிக். தமிழ் செய்தி சேனல்களில் இருந்து சற்று விலகி வந்து, தேசிய மற்றும் பிற மாநில தமிழ் செய்தி ஊடகங்கள் ‘விஜய் மாநாட்டை’ என்னவாக குறிப்பிட்டிருக்கிறது என்று சற்று பார்ப்போம்.

தி ஹிந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்தியன் எக்ஸ்பிரஸ், ஹிந்துஸ்தான் டைம்ஸ் உள்ளிட்ட பல தேசிய செய்தி ஊடகங்களின் த.வெ.க மாநாட்டின் தலைப்புகளே ‘நேற்று நடந்த மாநாட்டில் விஜய் திமுக-வை சாடியது தான்’. அதிலும் ‘சுயநல குடும்பம்’ என்று த.வெ.க தலைவர் விஜய் குறிப்பிட்டது பெரும்பாலான தலைப்புகளில் இடம்பெற்றிருக்கிறது.

Vijay – TVK

இந்த ஊடகங்கள் மேலும் இன்னொரு செய்திக்கு முக்கியத்துவம் தந்திருக்கிறார்கள் என்றால், அது ‘த.வெக-வின் கொள்கை தலைவர்கள்’ பற்றிய செய்திக்கு தான்.

இந்த இரண்டிற்கு அடுத்து, ‘ஆளுநர் திரும்ப பெறுதல் மற்றும் விஜய்க்கு வாழ்த்து சொல்லிய திரை பிரபலங்கள்’ பற்றிய செய்தி மட்டும் சில தேசிய ஊடகங்களில் இடம்பெற்றிருக்கிறது.

இது இல்லாமல், த.வெ.க மாநாட்டில் நடந்தது என்ன…பேசியது என்ன என்பதுப்போன்று தேசிய ஊடகங்களில் முழு செய்திக் கட்டுரையும் எழுதப்பட்டுள்ளது.

என்.டி.டி.வி மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் தங்களது தலைப்புகளில் விஜய் பாஜக-வை பற்றி குறிப்பிட்டது இடம்பெற்றிருக்கிறது. முக்கிய வட மாநில சேனல்கள் விஜய் கட்சியின் முதல் மாநாட்டை செய்தியாக கடந்து போயிருக்கிறது.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY