Tvk Vijay : `மாநாட்டில் இதற்கெல்லாம் தடை…’ – திடலில் பதாகைகள் வைத்து அறிவுறுத்தும் தவெக

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியிலுள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நாளை (அக்டோபர் 27) நடைபெறவிருக்கிறது. இந்த பிரமாண்டமான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் இருசக்கர வாகனத்தில் வரவேண்டாம், சாலை விதிகளை மதிக்க வேண்டும், காவல்துறையினருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படக் கூடாது. மது அருந்திவிட்டு வரக் கூடாது எனப் பல்வேறு கோரிக்கைகளை தவெக தலைவர் முன்வைத்திருந்தார்.

தா.வெ.க மாநாடு

இந்த நிலையில், மாநாடு நடக்கவிருக்கும் திடலில் தொண்டர்களுக்கென சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. மாநாட்டுத் திடல் முழுவதும் ‘தடை செய்யப்பட்ட பொருட்கள்’ என எழுதப்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டிருக்கிறது. அதன்படி தொண்டர்கள் மாநாட்டுத் திடலுக்குள் 18 விதமான பொருள்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

செல்ஃபி ஸ்டிக், ஆல்கஹால், வீடியோ கேமரா, ட்ரோன், இருசக்கர வாகனங்கள், பதாகைகள், போதை வஸ்துகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக, மற்ற கட்சிகளின் கொடியை எடுத்து வரக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இந்த விஷயத்தில் த.வெ.க நிர்வாகிகள் தீவிரம் காட்டுவதாக கூறப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs