தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு அக்டோபர் 27-ம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் பிரமாண்டமாக நடத்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் திட்டமிட்டிருக்கிறார். அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், தொண்டர்கள் அன்னதானம் வழங்குவது தொடங்கி, மாநாட்டுக்காக பேருந்து முன்பதிவு செய்வதுவரை அனைத்திலும் தீவிரமக ஈடுபட்டுவருகின்றனர். இதற்கிடையில், த.வெ.க-வின் முதல் மாநாடு வெற்றிகரமாக நடக்க பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சினிமா நட்சத்திரங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றன்.
Anna @actorvijay wishing you all the best for the massive journey ahead! You’ve always been an inspiration to us all. Here’s a little something from us to you. @tvkvijayhq #TheGreatestOfAllTime pic.twitter.com/3ywpJtyMUm
— venkat prabhu (@vp_offl) October 24, 2024
முன்னதாக திருமாவளவன், “நடிகர் விஜய் கட்சி தொடங்கி முதல் முயற்சியாக மாநாடு ஒன்றை நடத்த இருக்கிறார். அந்த மாநாடு வெற்றியடைய மனதார வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து, இயக்குநர் வெங்கட் பிரபு தன் எக்ஸ் பக்கத்தில், “விஜய் அண்ணா நீங்கள் எப்போதும் எங்கள் அனைவருக்கும் ஒரு வழிகாட்டியாகவே இருக்கிறீர்கள். உங்களின் இந்த மிகப்பெரிய அரசியல் பயணத்துக்கு வாழ்த்துகள். உங்களுக்காக எங்களிடமிருந்து…” எனப் பதிவிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். கோட் படத்தின் விசில் போடு பாடலில் நடிகர் விஜயின் படங்கள் எடிட் செய்யப்பட்ட வீடியோவை வெளிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs