வயநாடு: `தந்தைக்காக 17 வயதில் பிரசாரம்; இன்று எனக்காக..!” – சென்டிமென்ட் பிரியங்கா

வயநாடு நாடாளுமன்ற தொகுதி எம்.பி‌ பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்திருந்த நிலையில், அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகின்ற நவம்பர் 13 -ம் தேதி நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. கேரள மாநிலத்தை ஆளும் கட்சியான ஜனநாயக இடது முன்னணி சார்பில் சத்யன் போட்டியிடுகிறார். பா.ஜ.க தரப்பில் நவ்யா ஹரிதாஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக சில மாதங்களுக்கு முன்பே அக்கட்சியின் தலைமை‌ அறிவித்திருந்தது.

பிரியங்கா காந்தி

வேட்புமனு தாக்கலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், சோனியா காந்தி ராகுல் காந்தி மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் சூழ பேரணி நடத்தி வேட்புமனுவினை தாக்கல் செய்திருக்கிறார் பிரியங்கா காந்தி. நீண்ட கால அரசியல் பாரம்பர்ய பின்னணி கொண்டிருந்தாலும், முதன் முறையாக தேர்தல் அரசியலில் களமிறங்கியிருக்கிறார் பிரியங்கா காந்தி.

பேரணி கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, “என்னுடைய தந்தை ராஜிவ் காந்திக்காக முதன் முதலாக 17 வயதில் தேர்தல் பரப்புரை செய்துள்ளேன். கடந்த 35 ஆண்டுகளாக கட்சி நிர்வாகிகளுக்காக பல தேர்தல்களில் பரப்புரையில் ஈடுபட்டுள்ளேன். என்னுடைய தாய், தந்தை, சகோதரர், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்காகவும் பிரசாரம் செய்துள்ளேன்.

ஆனால், தற்போது எனக்காக ஓட்டு கேட்டு முதல் முறையாக வந்திருக்கிறேன். மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டத்தில் சாதி , மத பேதமின்றி அனைத்து தரப்பினரும் பங்கேற்றனர். அதுபோலவே இருக்கிறது இன்றயை பேரணி. வயநாடு மக்களுக்கு சேவையாற்ற எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் ” என சென்டிமென்ட்டாக பேசி முடித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88