திருப்பத்தூரில் கடந்த ஆண்டு நெடுஞ்சாலையின் நடுவே வரிசையாக மின் விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டது. இதில், பேருந்து நிலையத்தின் முன் அமைக்கப்பட்ட மின் விளக்கு கம்பங்களில் ஒன்று தற்போது சேதமடைந்தது, பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக விழும் தருவாயில் உள்ளது.
குறிப்பாக, இந்த இடத்தில் அதிகமாக வாகனங்கள் நிற்கின்றன. பேருந்துகளும் இவ்விடத்தில் நின்று தான் பேருந்து நிலையத்தின் உள்ளே செல்கின்றது.
இதனால், அந்த வழியே செல்லும் மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இந்த மின் விளக்கு கம்பம் மேலே விழுந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருப்பதுடன், ஆபத்தான சூழலை உருவாகியுள்ளது.
இது குறித்து அந்தப் பகுதியில் உள்ளவர்கள் கூறுகையில், “ஒரு மாதம் முன்பு லாரி மோதியதால் இந்த மின்கம்பம் சேதமடைந்தது. அதற்குப் பிறகு எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காத நிலையில், கம்பம் எப்போது விழுமோ என்று பயந்து பயந்து சாலையை கடக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.” என்றனர்.
சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள், ” விரைவில் கீழே விழும் அபாயத்தில் உள்ள இந்த மின்கம்பத்தை அதிகாரிகள் உடனடியாக கவனத்தில் கொள்ளவேண்டும். கீழே விழுந்து விபத்து ஏற்படுவதற்கு முன்பு நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
சரி செய்வார்களா அதிகாரிகள்?
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb