விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சங்கம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குச் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் ஆர்.பி. உதயகுமார் பேசுகையில், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவாக்கிய அரசை எதிர்த்து வாக்களிக்க வேண்டாம் என்று சபாநாயகர் கூறும் போதும், 11 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு ஆட்சி கவிழ வேண்டும் என்பதற்காக இரட்டை இலைக்கு எதிராக வாக்களித்தது ஓ.பன்னீர்செல்வமா அல்லது எடப்பாடி பழனிசாமியா என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். சாத்தான் வேதம் ஓதுகிறது எனக் கூறுகிறார்கள். யார் விசுவாசத்தைப் பற்றிப் பேசுவது? யார் துரோகத்தைப் பற்றிப் பேசுவது? ஆண்டிபட்டி தொகுதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெற்றிபெற்ற தொகுதி.
ஆனால் அந்தத் தொகுதியில் இரட்டை இலை அ.தி.மு.க., சதியால் தோற்கடிக்கப்பட்டது சூழ்ச்சி. இந்த லட்சணத்தில் அவர் எப்படி கட்சிக்குத் தலைவராக இருக்க முடியும். தலைவராக இருக்கும் நபர் தோற்றபிறகு, அவரைப் பல்லாக்கில் வைத்துச் சுமக்க அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டன் ஒருநாளும் தயாராக இருக்க மாட்டான். முதலமைச்சர் வேட்பாளர் தோற்றுவிட்டால், கட்சி ஒருங்கிணைப்பாளரான நாம் கட்சியைக் கபளீகரம் செய்துவிடலாம் என்று நினைத்த துரோகத்திற்கு, ஜெயலலிதாவின் ஆன்மா சம்பட்டி அடி கொடுத்துள்ளது.
செய்வதையெல்லாம் செய்துவிட்டு ‘யோக்கியன் வருகிறான் செம்பை எடுத்து உள்ளே வை’ என்பதுபோல் பேசுகிறார்கள். துரோகத்தின் மொத்த உருவமே ஓ.பன்னீர்செல்வம்தான். அவர், இன்னும் நிறைய அனுபவிப்பார். விருதுநகரில் உள்ள ஏழு தொகுதியிலும் வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., வெற்றிபெற்றால் விருதுநகர் மாவட்டத்திற்கு மூன்று அமைச்சர்கள் கொடுக்க வேண்டுமென்பது லட்சியம். ஒரு அமைச்சர் நிச்சயம்” என உறுதியாகக் கூறுகிறேன்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY