மத்திய அரசின் பொது ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதியின் (Prasar Bharati), தூர்தர்ஷன் இந்தி செய்தி சேனலின் லோகோ நிறம், கடந்த ஏப்ரலில் காவி நிறத்துக்கு மாற்றப்பட்டது. அந்த சமயத்தில் இதற்கு அரசியல் எதிர்ப்புகளும் வந்தன. தூர்தர்ஷன் தமிழ் சேனலின் லோகோவும் தற்போது காவி நிறத்தில்தான் இருக்கிறது.
இந்த நிலையில், மக்கள் மத்தியில் மீண்டும் வரவேற்பைப் பெற்றுவரும் மத்திய அரசின் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் (BSNL)-ன் லோகோவும் காவி மயமாக்கப்பட்டிருக்கிறது. டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பி.எஸ்.என்.எல்லின் புதிய காவி நிற லோகோவை அறிமுகப்படுத்தினார்.
ஏற்கெனவே இருந்த பழைய லோகோவானது, சாம்பல் நிற வட்டத்தைச் சிவப்பு மற்றும் நீல நிறத்தில் இரண்டு அம்புக்குறிகள் சுற்றிவருவது போல இருக்கும். மேலும், பி.எஸ்.என்.எல் என்ற வார்த்தைக்கு கீழே `கனெக்டிங் இந்தியா’ என்ற வாசகமும் இடம்பெற்றிருக்கும்.
தற்போது, ஏற்கெனவே இருந்த சாம்பல் நிற வட்டத்தைக் காவி நிறமாக்கி, அந்த வட்டத்துக்குள் இந்தியாவின் வரைபடத்தை வைத்து, வெள்ளை மற்றும் பச்சை நிறத்தில் இரண்டு அம்புகுறிகள் அந்த காவி வட்டத்தைச் சுற்றி வருவது போல புதிய லோகோ மாற்றப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், கனெக்டிங் இந்தியா என்றிருந்த வாசகத்தை நீக்கி, காவி நிறத்தில் `கனெக்டிங் பாரத்’ என புதிய வாசகம் வைக்கப்பட்டிருக்கிறது.
அது கூடவே, காவி, நீலம் மற்றும் பச்சை நிறங்கள் முறையே `Securely, Affordably, Reliably’ என்ற மூன்று வார்த்தைகளும் சேர்க்கப்பட்டிருக்கிறது. இவற்றோடு, பி.எஸ்.என்.எல்லின் ஏழு புதிய சேவைகளை ஜோதிராதித்ய சிந்தியா அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb