ஸ்டாலினிடம் சரணடைந்த Thiruma, Congress, CPM, CPI? கொதிக்கும் நிர்வாகிகள் – கூட்டணி குஸ்தி! JV Breaks

திமுக தலைமையில் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விசிக உள்ளிட்ட மெகா கூட்டணி அமைத்து ஏழு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. திமுக ஆட்சியின் மீதும் எக்கச்சக்கமான புகார்கள், குற்றச்சாட்டுகள் உள்ளன . விசிக மது ஒழிப்பு மாநாடு தொட்டு கம்யூனிஸ்டுகளின் சாம்சங் தொழிலாளர்களுக்கான போராட்டம் வரை நிறைய பிரச்சனைகள் உண்டு. இதில் கூட்டணி கட்சி தலைவர்களோ திமுக மீது மயிலிறகு வருடல் போல மென்மையாக விமர்சனங்களை வைக்கின்றனர். ஆனால் வீரியமான போராட்டங்களை முன்னெடுப்பதில்லை என கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தங்கள் தலைமை மீது அதிருப்தியோடு உள்ளனர். திமுகவிடம் சமரசம் அடைந்துவிட்டார்களா கூட்டணி கட்சி தலைவர்கள்? என்ன நடக்கிறது?!