அதிமுக மருத்துவர் அணி மாநில இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் விடுத்துள்ள அறிக்கையில், “சென்னை, கடல் மட்டத்திலிருந்து வெறும் ஆறு அடி தான் உள்ளது. சாதாரண மழைக்கு தாங்க முடியாத நகரமாக மாறிவிட்டது, ஆனால், சரியாக திட்டமிட்டால் மழை வெள்ளத்தை நாம் எதிர் கொள்ளலாம் என்பதை கடந்த கால வரலாறு கூறுகிறது.
உலகை அச்சுறுத்திய சுனாமியை ஜெயலலிதா எதிர்கொண்டதை அப்போது அமெரிக்க அதிபர் பாராட்டினார், அதனை தொடர்ந்து கஜா புயல், வர்தா புயல் என்று பல்வேறு புயல்களை ஒரு உயிரிழப்பு கூட இல்லாமல் எடப்பாடி பழனிசாமி எதிர்கொண்டார்.
சென்னையிலுள்ள 200 வார்டுகளில் மூன்று லட்சத்துக்கும் அதிகமான கட்டடங்கள் உள்ளது. இதற்கு தேவையான மழைநீர் வடிகால் கட்டமைப்பு வசதிகளை அரசு சரியாக திட்டமிடவில்லை. குறிப்பாக 5000 கோடியில் மழை நீர் வடிகாலை அமைத்தோம், அதன் மூலம் ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்காது என்று சொன்னார்கள். ஆனால், சென்னை மாநகரமே மற்றொரு மெரீனா போல காட்சி அளிக்கிறது.
உதயநிதி ஸ்டாலின் கார் ரேஸ் நடத்தினார். அப்போது சென்னையில் ஒரு சொட்டு தண்ணீர் இல்லை. அதற்கு காட்டிய அக்கறையை 50 சகவிகிதம் இதற்கு செய்திருந்தாலே சென்னையை மழை வெள்ளத்திலிருந்து காப்பாற்றி இருக்க முடியும்.
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, ‘மக்கள் இல்லம் தேடி மருத்துவம்’ என்று விளம்பரப்படுத்தினார்கள். அந்தத் திட்டம் தோல்வியைத்தான் பெற்றது. ஆனால், இப்போது ‘மக்கள் இல்லம் தேடி மழைவெள்ளம்’ வந்துவிட்டது, கடந்த சட்டமன்றத் தேர்தலில், ‘ஸ்டாலின்தான் வராரு, விடியல் தரப்போறாரு’ என்று சொன்னார்கள். இப்போதோ, ‘ஸ்டாலின் வந்துவிட்டார், நீச்சல் அடிக்க விட்டார்’ என்று மக்கள் பாட்டு பாடும் நிலைமை உள்ளது.
நாங்கள் சொன்னதை செய்வோம், சொல்லாததையும் செய்வோம் என்று சொன்னார்களே, அது இதுதானா? இன்றைக்கு தமிழகத்தில் 80 லட்சம் வீடுகள் உள்ளது. இதன் மூலம் சொத்து வரி, மின் கட்டணம் உள்ளிட்டவை மூலம் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை ஈட்டும் அரசு, மழைநீர் வடிகால் பணிகளை செய்யவில்லை. மகன் உதயநிதியை துணை முதலமைச்சராக்க காட்டிய அக்கறையை, மக்களை காக்க முதலமைச்சர் எடுக்கவில்லை, தொடர்ந்து இந்த அரசு நீடித்தால் தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது. மீண்டும் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வருவார், மக்களை காப்பார்” என தெரிவித்துள்ளார்.
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY