சென்னை விமான சாகச நிகழ்ச்சியில் முறையான பாதுகாப்பு வசதிகளை அரசு செய்ததா? | விகடன் கருத்துக்கணிப்பு

இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு நிறைவையொட்டி அக்டோபர் 6-ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில், விமானப் படை சார்பில் மிகப்பெரிய அளவில் விமான சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 15 லட்சம் பேர் கூடுவார்கள் என்று எதிர்பார்ப்பதாக விமானப் படை கூறியதுபோலவே, அந்த மத்தியான உச்சி வெயிலில் லட்சக் கணக்கில் மக்கள் குவிந்தனர்.

Chennai Air Show

இந்த நிகழ்ச்சியால், போக்குவரத்து நெரிசல், புறநகர் ரயில் மற்றும் மெட்ரோ ரயில்களில் பெருங்கூட்டத்தால் பொதுமக்களுக்கு கடும் அவதி, விமான சாகச நிகழ்ச்சியைக் காண வந்தவர்களில் 200-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தது, 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டது.

இதனால், `கார் பந்தயத்துக்கு மாதக் கணக்கில் முன்னேற்பாடுகள் செய்யும் அரசு, இவ்வளவு லட்சம் பேர் கூடுவார்கள் என்று முன்பே தெரிந்தும் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் மக்களின் வாழ்க்கையில் விளையாடுவதா’ என பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

விகடன் கருத்துக்கணிப்பு

அதைத்தொடர்ந்து, விகடன் இணையதளப் பக்கத்தில் இந்த நிகழ்வு குறித்து கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில், `சென்னை விமான சாகச நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய முன்னேற்பாடுகள்?’ என்ற கேள்வி கேட்கப்பட்டு, `சிறப்பாக இருந்தது, மோசமாக இருந்தது, ஓரளவு செய்யப்பட்டிருந்தது’ என மூன்று விருப்பங்களும் தரப்பட்டிருந்தது.

விகடன் கருத்துக்கணிப்பு

இந்த நிலையில், கருத்துக்கணிப்பு முடிவில், `அதிகபட்சமாக 62 சதவிகிதம் பேர் பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய முன்னேற்பாடுகள் மோசமாக இருந்தது’ எனத் தெரிவித்திருக்கின்றனர். அதற்கடுத்தபடியாக, 24 சதவிகிதம் பேர் ஓரளவு செய்யப்பட்டிருந்தது எனவும், 14 சதவிகிதம் பேர் சிறப்பாக இருந்தது எனவும் தெரிவித்திருக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb