பாஜகவுடன் கூட்டணி? – “ஜோசியம் சொல்ல முடியாது; எது வேண்டுமானாலும் நடக்கலாம்” – திண்டுக்கல் சீனிவாசன்

பாஜகவுடனான கூட்டணி குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருக்கிறார்.

திமுக அரசை கண்டித்தும், உயர்த்தப்பட்ட சொத்து வரியை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான திண்டுக்கல்லில் சீனிவாசன் கலந்து கொண்டார்.

திண்டுக்கல் சீனிவாசன்

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் பாஜக உடனான கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், “ஜோசியம் சொல்ல முடியாது. சூழ்நிலையை பொறுத்துதான் எல்லா முடிவுகளும். தேர்தல் வரும்போது அது குறித்து தெரியவரும். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பரும் இல்லை. எது வேண்டுமானாலும் நடக்கலாம். இப்பொழுது பா.ஜ.க-வுக்கு நாங்கள் எதிரி. 15 மாதங்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்” என்று தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்து பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், ” அண்ணா தொடங்கிய கட்சியை ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும். கருணாநிதி முதலமைச்சராக இருக்கும்பொழுது மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக ஆக்கப்பட்டார். அதேபோல் மு.க.ஸ்டாலின் தனது மகனை துணை முதல்வராக ஆக்கி இருக்கிறார். இதன் பிறகு இன்பநிதி துணை முதலமைச்சராக ஆக்கப்படுவார் என நினைக்கிறோம். உள்ளாட்சி தேர்தல் நடக்குமா? நடக்காதா? என்பதை ஆளுங்கட்சிதான் முடிவு செய்ய வேண்டும். எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது.

திண்டுக்கல் சீனிவாசன்

கொடுங்கோள் ஆட்சி நடைபெறுகிறது. தேவையில்லாத ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்கக்கூடாது. விஜய் கட்சி ஆரம்பிப்பதை வரவேற்கிறோம். மாநாட்டைத் தொடர்ந்து அவர் என்ன செய்ய உள்ளார் என்பதை இனி தான் பார்க்க வேண்டும். தற்போது எந்த விமர்சனமும் விஜய்க்கு எதிராக கிடையாது. 2026 தேர்தலை சந்திக்க பதினாறு அமாவாசை இருக்கிறது. 10 அமாவாசை முடிந்தவுடன் திமுக கூட்டணியில் உள்ள அனைவரும் எடப்பாடியுடன் சேர்ந்து கொள்வார்கள். மக்களும் அதிமுகவிற்கு ஓட்டு போடுவதற்கு தயாராக உள்ளனர்” என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…