Housing: “நல்ல பில்டர், கெட்ட பில்டர் எப்படி கண்டுபிடிப்பது?” – நிதி ஆலோசகர் சுந்தரி ஜெகதீசன் பேட்டி

ஒரு கட்டிடத் திட்டத்தைச் சுற்றியுள்ள ஆபத்தான தர சிக்கல்களைப் பற்றி இந்த வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது .  வீட்டுக் கொள்கைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து நிதி ஆலோசகர் சுந்தரி ஜெகதீசன் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். 

ரியல் எஸ்டேட் நல்லா வளர்ந்திட்டு இருக்கிற நிலையில எப்படி கவனிச்சு வீடு வாங்குறது ? 

“ஹைதாரபாத் மும்பையை விட சென்னையில தான் எல்லா ரியல் எஸ்டேட்டும் மேல போய்ட்டு இருக்கு. முக்கியமா ஆபிஸ் மற்றும் கமெர்ஷியல் ஸ்பேஸ் மேல போயிட்டு இருக்கு. என்னதான் வெள்ளம் புயல்ன்னு வந்தாலும் மக்கள் வீடு வாங்குறதுல துடியா இருக்காங்க. எல்லாரும் எல்லாமும் பெறணும்கிறதுதான் நம்மளோட ஆசையும். ஆனால் அதுல நிறைய பாதுகாப்பாக இருக்க வேண்டிய தேவையும் இருக்கு. குறிப்பாக, பொருளாதார முடிவுகளை எடுக்கும் போது உள்ளதுக்கு இடமே கொடுக்காதீங்க. பேராசையும் பயமும் நம்மை ஆட்டு விக்கும். நம்மளோட முடிவுகளைத் தப்பா போக வைக்கும். அவங்க கொடுக்கிற சலுகைகள் முன்ன விட அதிகமாக மக்களைக் கவர்வதை நம்மால் பார்க்க முடிகிறது”

ஏற்கெனவே கட்டிய அபார்மெண்டை வாங்குறது நல்லதா? இல்லை கட்டிட்டு இருக்கிற அபார்ட்மெண்டை வாங்குறது நல்லதா? இந்த இரண்டுல எது சிறந்தது? 

“இந்த இரண்டுலயும் நல்லது கெட்டது இரண்டும் இருக்கும். ஏற்கெனவே கட்டுனதாக இருந்தீச்சினா அதை எப்படி கட்டப்பட்டதுங்கிற தரம் நமக்கு தெரியாது. அதோட தரத்தையும் நம்மளால உறுதி படுத்த முடியாது. கட்டிட்டு இருக்கிறதுனா பில்டரோட தன்மையை வச்சி அதைபோல அந்த இடம் பில்டருக்கு சட்டப்பூர்வமா சொந்தமா இருக்குதான்னு பாத்துட்டு தான் இறங்கனும்.” 

அபார்மெண்ட்களில் முக்கியமான பிரச்னையாக லிப்ட், பார்க்கிங் ஏரியா போன்ற பொது இடங்களைப் பயன்படுத்துவதில் பல்வேறு சிக்கல் இருக்கிறது. இதைப்பத்தி சொல்லுங்க? 

“நம்ம வீடு பார்க்கபோகையிலே அந்த வீட்டோட அழகை மட்டும் பார்க்கக்கூடாது. அங்க பொது இடங்கள் எப்படி இருக்கிறதுங்கிறதை நம்ம முக்கியமா கவனிக்கணும். எப்போதுமே நமக்கு என்ன தேவைங்கிறதுல கவனமா இருக்கிறது நல்லது. “

இவ்வாறு பல விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். சுந்தரி ஜெகதீகன் அவற்றை முழுமையாக காண லிங்கை கிளிக் செய்யவும்.