Top 3 Trains: இந்த ரயிலின் ஆண்டு வருமானம் ரூ.176 கோடி, முதலிடத்தை பிடித்த ரயில் எது?

24 மில்லியன் பயணிகள்… ஒரு நாளின் இந்திய ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை. இந்தியாவில் கிட்டதட்ட 13,000 பயணிகள் ரயில்களும், கிட்டதட்ட 8,000 சரக்கு ரயில்களும் உள்ளன.

இத்தனை ரயில்களில் எந்த ரயில் அதிக லாபத்தை ஈட்டுகிறது என்று தெரியுமா? தரவுகளின் படி, அதிக லாபம் ஈட்டும் ரயில் ‘ராஜ்தானி எக்ஸ்பிரஸ்’.

2022-23 நிதியாண்டில் தரவுகளின் படி, ‘பெங்களூரு ராஜ்தானி எக்ஸ்பிரஸ்’ (22692) அந்த நிதியாண்டில் ரூ.176.06 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. அந்த ஆண்டில் 5.09 லட்சம் பயணிகள் ராஜ்தானி எக்ஸ்பிரஸில் பயணித்திருக்கிறார்கள். இந்த ரயில் ஹசரத் நிசாமுதீன் மற்றும் கே.எஸ்.ஆர் பெங்களூரு இடையில் ஓடுகிறது.

அதிக லாபம் ஈட்டும் ரயில் ‘ராஜ்தானி எக்ஸ்பிரஸ்’!

இதற்கு அடுத்த இடத்தைப் பிடிக்கும் ரயில் ‘சீல்டா ராஜ்தானி எக்ஸ்பிரஸ்’ (12314). இது கொல்கத்தா டூ புது டில்லி செல்கிறது. இந்த ரயிலில் அந்த நிதியாண்டில் 5.09 லட்சம் பேர் பயணம் செய்திருக்கிறார்கள். இதன் வருமானம்128 கோடி ரூபாய் ஆகும்.

மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கும் ரயில், ‘திப்ருகர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ்’. இது புது டில்லி டூ திப்ருகர் செல்கிறது. இதில் 2022-23 நிதியாண்டில் 4.74 லட்ச பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதன் வருமானம் 126 கோடி ரூபாய் ஆகும்.