மதுரை: பயணிப்பவர்களை அச்சுறுத்தும் பாலத்தின் தடுப்புச்சுவர் – நடவடிக்கை எடுக்குமா நெடுஞ்சாலைத்துறை?

மதுரை நகரில் எட்டையபுரம் – மதுரை நெடுஞ்சாலையில் உள்ள தெற்கு வாசல் – வில்லாபுரம் மேம்பாலம் பராமரிப்பின்றி அதிக சேதமடைந்து இருக்கிறது. இந்த சாலை மதுரை விமான நிலையத்தில் இருந்து நகருக்குள் வருவதற்கான மிக முக்கியமான சாலையாக உள்ளது. மேலும் மதுரையின் முக்கிய இடங்களான மீனாட்சியம்மன் திருக்கோயில், திருமலை நாயக்கர் மஹால் , காய்கறி சந்தைகள் போன்றவற்றிற்கு அதிக மக்கள் வந்து செல்வதற்கு இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.

ஒரு நாளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் இப்பாலம் ஆங்காங்கே இடிந்த நிலையிலும், வெறும் கம்பிகளுமாக காணப்படுகிறது. இத்துடன் சில இடங்களில் அந்தக் கம்பிகளும் இல்லாமல் வெற்றிடமாக இருப்பது பாலத்தில் பயணிக்கும் மக்களுக்கு மிகுந்த பயத்தை ஏற்படுத்துகிறது. இரவு நேரங்களில் இவ்விடங்களில் எச்சரிக்கை அறிவிப்புகள் ஏதும் இல்லாததால் இப்பாலத்தில் பயணிப்பது பெரும் சவாலாக இருப்பதாகவும், அதிக விபத்துக்கள் ஏற்படுவதாகவும் பொது மக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.

பாலத்தில் சில இடங்கள் இடிந்து, மழை நேரங்களில் பாலத்தின் கீழ் இருக்கும் குடியிருப்பு பகுதியில் விழுவதாகவும் அதனால் குழந்தைகளை வெளியே விளையாடுவதற்கு அனுமதிக்க அச்சம்கெள்வதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர்.

பலமுறை இதைப்பற்றி உரிய அதிகாரிகளிடம் புகார்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அப்படியே நடவடிக்கை எடுத்தாலும் ஆங்காங்கே பூசி விட்டு செல்கின்றனர் என்று வருத்தத்துடன் கூறுகிறார்கள் பொது மக்கள். இந்த பிரச்னைக்கான ஒரு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் பெரிதும் உள்ளது.

இதைப்பற்றி மாநில நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளரைத் தெடர்புக் கொண்டோம் ‘பாலத்தை சீரமைக்கும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும்’ என்று கூறியுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY