மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, நுரையீரல் தொற்று காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்.
அவருக்கு வயது 72. இந்திய மார்க்சிய வரலாற்றில் தவிர்க்க முடியாத கொள்கைப் போராளியாக அறியப்படுபவர் சீதாராம் யெச்சூரி. மாணவராக எமெர்ஜென்ஸியை எதிர்த்துப் போராட்டத்தை தொடங்கியது, இந்திரா காந்தியிடம் நேருக்கு நேர் கேள்வி எழுப்பியது, சோவியத் யூனியனின் பொதுச் செயலாளர் கார்பச்சேவிடம் முரண்பட்டது வரை, சீதாராம் யெச்சூரி கடந்துவந்த அரசியல் பாதை சவாலானது. அது குறித்து பின்வரும் வீடியோவில், விவரமாக எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது. க்ளிக் செய்து பாருங்கள்.