அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகர் போர்ட் பிளேயரின் பெயரை, ஸ்ரீ விஜயபுரம் என மத்திய அரசு மாற்ற முடிவெடுத்திருக்கிறது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, `முந்தைய பெயர் காலனித்துவ மரபைக் கொண்டிருந்தாலும், ஸ்ரீ விஜயபுரம் நமது சுதந்திரப் போராட்டத்தில் அடைந்த வெற்றியையும், அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தனித்துவமான பங்கையும் குறிக்கிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.
மேலும் அவர், “பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டு, நாட்டை காலனி ஆதிக்கத்திலிருந்து விடுவிப்பதற்காக, இன்று அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகர் போர்ட் பிளேயரை `ஸ்ரீ விஜயபுரம்’ என்று பெயர் மாற்ற முடிவு செய்துள்ளோம். முந்தைய பெயர் காலனித்துவ மரபைக் கொண்டிருந்தாலும், ஸ்ரீ விஜயபுரம் நமது சுதந்திரப் போராட்டத்தின் வெற்றியையும், அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தனித்துவமான பங்கையும் குறிக்கிறது. நமது சுதந்திரப் போராட்டத்திலும் சரித்திரத்திலும் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு இணையற்ற இடம் உண்டு. ஒரு காலத்தில் சோழப் பேரரசின் கடற்படைத் தளமாக விளங்கிய தீவுப் பகுதி இன்று நமது மூலோபாய மற்றும் வளர்ச்சி அபிலாஷைகளுக்கு முக்கியமான தளமாக விளங்குகிறது. இங்குதான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸால் முதல்முறையாக நமது தேசியக்கொடி ஏற்றப்பட்டது. மேலும், நமது சுதந்திரத்துக்காகப் போராடிய வீர் சாவர்க்கர் மற்றும் பிற சுதந்திரப் போராட்ட வீரர்கள் அடைக்கப்பட்டிருந்த செல்லுலார் சிறையும் இங்குதான் இருக்கிறது” என்று பதிவிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY