திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள ஸ்ரீபிரத்யட்ச வராஹி அம்மன் திருக்கோயிலில் ஸ்ரீவராஹி ஹோமம், 22.9.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று – புரட்டாசி மாத தேய்பிறை பஞ்சமித் திருநாளில் மாலை 6 மணிக்கு மேல் நடைபெறவுள்ளது.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-6680 2980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
பௌர்ணமிக்கு அடுத்து வரும் ஐந்தாவது திதி தேய்பிறை பஞ்சமி. தேய்பிறை பஞ்சமி நாள் வராஹியை வழிபட உகந்த நாள். ஆதி பராசக்தியின் படைத்தலைவியான ஸ்ரீவராஹி எதிரிகளிடம் இருந்து நம்மைக் காத்து அருள்புரிய கூடியவள். வராஹியை வழிபடுவதால் மனதில் தைரியமும், தெளிவும், தன்னம்பிக்கையும் பிறக்கும்.
வராஹ முகமும், தெய்விகப் பெண் உடலும் கொண்டு, பெரிய ஸ்ரீசக்கரத்தை கரங்களில் ஏந்தியவள். பஞ்சமி நாளில் வராஹி அம்மனை குங்குமம் மற்றும் செந்நிறப் பூக்கள் கொண்டு அர்ச்சித்தால் உடனடியாக மனம் குளிர்ந்து நாம் வேண்டும் வரங்களைத் தரக் கூடியவள். வராஹிக்கு உகந்த நிறம் பச்சை என்றும், அவளுக்கான பாமாலை நூல் வராஹி மாலை என்றும் சொல்லப்படுகிறது. மாலை 6.30 மணிக்கு மேல் வராஹி வழிபாட்டைச் செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது.
வராஹியை வழிபட மாங்கல்ய பலம், வியாபார விருத்தி, வெளிநாட்டு வாய்ப்புகள், ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும். மேலும் எதிரிகள் தொல்லை நீங்கும். வம்பு வழக்குகள் தீரும். வராஹி மண்ணுக்கான தெய்வம் என்பதால் வீடு, நிலம் போன்ற சிக்கல்கள் நீங்கும். தீராத கடன் சிக்கல்கள் நீங்கும். எதுவரினும் அதைத் தாங்கும் மனதைரியம் பிறக்கும். கேட்ட வரங்கள் யாவும் கிடைக்கும். குழந்தை பாக்கியம் மற்றும் கலை-கல்வியில் முன்னேற்றம் உண்டாகும் என்கின்றன ஞான நூல்கள்.
தமிழகத்தில் பல்வேறு தலங்களில் ஸ்ரீவராஹி அம்மன் சிறப்பாகக் கொலு வீற்றிருக்கிறாள். குறிப்பாக நேரிலேயே வந்து பேசும்விதமாக ஸ்ரீவராஹி, பிரதட்சய வராஹியாக அருள்வது திருப்பூர் தாராபுரத்தில் என்கிறார்கள் பக்தர்கள். அதீத சக்தியும் சாந்நித்தியமும் வாய்ந்தவள் ப்ரத்யக்ஷ வராஹி. பக்தர்கள் வேண்டு வதை, அவர்களின் கனவிலோ வேறு எந்த வடிவிலோ தோன்றி பிரத்யட்சமாக வழிகாட்டி, நிறைவேற்றித் தருபவள் இவள் என்கிறார்கள்.
இந்த வராஹி தேவி ஆலயத்தில் சூலதேவி, பாலகணபதி, பால திரிபுர சுந்தரி, உன்மத்த பைரவர், காமாக்யா தேவி ஆகியோரையும் தரிசிக்கலாம். இந்த ஆலயத்தில் காலை கணபதி ஹோமம் முதல் விசேஷ வழிபாடுகள், புஷ்பாஞ்சலி, ஆரத்தி போன்றவை சிறப்பாக நடைபெறுகின்றன.
வராஹி மண்ணுக்கான தேவி என்பதால் நிலம் வீடு தொடர்பான பிரச்னைகளைத் தீர்ப்பதில் சிறப்பானவள் என்கிறார்கள். ரியல் எஸ்டேட் தொடர்பான எல்லா பிரச்னைகளையும் தீர்ப்பவள். மேலும் சொந்த வீடு அருள்வதில் இவளுக்கு நிகரான தெய்வம் இல்லை என்கிறார்கள். கல்வி பயிலும் மாணவ-மாணவிகளுக்கு நல்ல மதிப்பெண் எடுக்க வைப்பதிலும், சகல கலைகளிலும் சிறக்க வைப்பதிலும் இவள் கருணை கொண்டவள் எனப் போற்றுகிறார்கள்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-6680 2980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
திருப்பூர் தாராபுரம் ஸ்ரீபிரத்யட்ச வராஹி கோயிலில் செவ்வாய், ஞாயிறு ராகு கால பூஜைகள் மிகுந்த விசேஷமானவை. அந்நாளில் வழிபட நினைத்தவை யாவும் நிறைவேறுமாம். இங்கு வளர்பிறை பஞ்சமி அன்று காலை வராஹி தேவிக்கு சிறப்பு பூஜைகளும், தேய்பிறை பஞ்சமி நாளில் இரவு ஹோம வழிபாடுகளும் நடைபெறுகின்றன. இதில் கலந்து கொண்டு சங்கல்பிக்க குடும்ப க்ஷேமம் உண்டாகும்.
தேய்பிறை பஞ்சமியில் வராஹியை வழிபட்டால் எண்ணியவை யாவும் ஈடேறும் என்பது நம்பிக்கை. எந்தவித கிரக தோஷ பாதிப்புகளை அனுபவிப்பவர்களாக இருந்தாலும், தேய்பிறை பஞ்சமியில் வராஹி ஹோமம் செய்து வழிபட்டால் அவை நீங்கும். கடன் பிரச்னைகள் நீங்கி செல்வவளம் சேரும் என்பதும் நம்பிக்கை.
வாசகர்களின் கவனத்துக்கு!
இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விசேஷ ரட்சை, விபூதி மற்றும் குங்குமம் அனுப்பி வைக்கப்படும்(தமிழகம் – புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி வழிபாடுகள் வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-6680 2980/07