‘திருமாவளவன் திமுக-வுக்கு ஏதோ சொல்ல வருகிறார்’ – வானதி சீனிவாசன்

கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,  “மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறும் முதல்வர், விநாயகர் சதுர்த்தி போன்ற இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிப்பதில்லை.

வானதி சீனிவாசன்

சென்னை பள்ளியில் மகாவிஷ்ணு பேசியதை நான் ஆதரிக்கவில்லை. அதே சமயம் ‘ஆம் மதமாற்றம் செய்கிறோம்’ என வெளிப்படையாக பேசுபவர்களை அரசு வேடிக்கை பார்க்கிறது. விருப்பப்பட்டு மதம் மாறுபவர்களை நாங்கள் எதுவும் கூறுவதில்லை.

ஆனால், ஆசை வார்த்தைகளை கூறி மதமாற்றத்தில் ஈடுபடுகின்றனர். மது ஒழிப்புக்கு பாஜக பல்வேறு மாநாடுகள், போராட்டங்களை நடத்தியுள்ளது. திருமாவளவனுக்கு கூட்டணியில் என்ன பிரச்னை என்று தெரியவில்லை. அவர் திமுகவுக்கு எதையோ சொல்ல விரும்புவதாக இதை பார்க்கிறோம்.

திருமாவளவன்

 ஜி.எஸ்.டி என்பது மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டம். அதில் எல்லா பிரச்னைகளுக்கும் மத்திய அரசை மட்டுமே குற்றம்  சொல்வதை எந்த வகையிலும் ஏற்க முடியாது.

கோவை தொழில் நகரம். இங்கு தொழில் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது அரசின் கடமை.  அதை  பாதிக்கும் வகையில் செயல்பட்டால், பாஜகவின் குரல் மக்களுக்காக ஒலிக்கும். பாஜக தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது.

கோவை

இதற்கு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாங்கிய வாக்குகளே சாட்சி. கல்லூரி பெண்கள் பாதுகாப்பில் காவல்துறை கவனம் செலுத்த வேண்டும். பாலியல் ரீதியான சீண்டல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY