மதுரை கே.கே.நகர் 80 அடி சாலையில் கடந்த செ்டம்பர் 7-ம் தேதி விநயகர் சதுர்தியன்று மதுரை ஶ்ரீ ஜெயபிரபா ஜூவல்லர்ஸ் இன் அடுத்த அத்தியாயமான பெண்களுக்கென பிரத்யேக பட்டு மாளிகை ‘சாந்தாஸ் சில்க்ஸ்’ அழகின் கம்பீரமாய் துவங்கப்பட்டது.
நிறுவன இயக்குனர்கள் KVKR. பிரபாகரன், KVKR.தனசேகரன், சங்கர தேவி, Dr.நிவேதிதா ஆகியோர் வரவேற்றனர். அருப்புக்கோட்டை ஜெயவிலாஸ் கோவிந்தராஜ் மில்ஸ் உரிமையாளர் வரதராஜ் மனைவி திருமதி.சென்பகாதேவி, அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மனைவி திருமதி ஆதி லட்சுமி அவர்கள் சாந்தாஸ் சில்க்ஸ் ஐ திறந்து வைத்தனர். தமிழச்சி தங்கபாண்டியன் M.P. , மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த், மணிமேகலை, சுமதி, சரளா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.
மதுரை ஜெயவிலாஸ் ( Hero) உரிமையாளர் பாபு, அருப்புக்கோட்டை ஜெயவிலாஸ் உரிமையாளர் கார்த்திகேயன் ஆகியோர் முதல் பட்டு சேலை விற்பனையை துவக்கி வைத்தனர். அதனை மதுரை நந்தினி நர்சிங் ஹோம் மருத்துவர் சுஜாதா பெற்றுக்கொண்டார். அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு , RB உதயகுமார் , முன்னாள் துணை மேயர் திரவியம் , ஜெயவிலாஸ் மில்ஸ் மேலாளர் கோபால் தினகரன் , ஜெயவிலாஸ் உரிமையாளர் விஜயராமன், விருதுநகர் திருவேங்கடம் மருத்துவமனை சுப்பாராஜ் , மதுரை RPP பெயிண்ட் பாலகிருஷ்ணன், KG scans சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர். இங்கு பாரம்பரியமான உயர் தரத்தில் தனித்துவமிக்க பட்டுபுடவைகள் உள்ளன. காஞ்சிப் பட்டு முதல் அனைத்து பிரத்யேக பட்டு ரகங்களும் ரசனை மிக்க பாண்டி நாட்டு இளவரசிகளுக்காக சிறப்பு தள்ளுபடிகளுடன் சாந்தாஸ் சில்க்ஸ் இல் அணிவகுத்துள்ளது என நிர்வாகிகள் தெரிவித்தனர்.