சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் (76) சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். முன்னதாக, நுரையீரல் தொற்று பாதிப்பு காரணமாக செப்டம்பர் 3-ம் தேதியன்று சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் வெள்ளையன் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, அதே மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ நிபுணர்கள் குழு தீவிர சிகிச்சையளித்து, அவரின் உடல்நிலையைக் கண்காணித்து வந்தனர். இந்தநிலையில்தான், சிகிச்சை பலனின்றி வெள்ளையன் தற்போது உயிரிழந்திருக்கிறார். இவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY