Trump: “நான் அமைக்க இருக்கும் கமிஷனுக்கு தலைமை தாங்க மஸ்க் ஒப்புக்கொண்டுவிட்டார்” – டொனால்ட் ட்ரம்ப்

‘பதவி காலம் முடியும்போது டிரம்பின் வயது 82 ஆக இருக்கும். இந்த அதிக வயது பிரதமர் பதவிக்கு சரியானது அல்ல’ என்று எலான் மஸ்க் கடந்த 2022-ம் ஆண்டு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் தான், யாரும் எதிர்பார்க்காத சமீபத்திய காம்போவாக அமைந்தது ‘டிரம்ப் – மஸ்க்’ காம்போ. சமீபத்தில் கூட ட்விட்டர் எக்ஸ் தளத்தில் மஸ்க் ட்ரம்பை பேட்டிக் கண்டிருந்தார்,

இந்த நிலையில், “நான் பதவிக்கு வந்தால் நிதி மோசடிகள் தடுக்கும் வகையில் எலான் மஸ்க் தலைமையில் கமிஷன் அமைப்பேன்” என்று டிரம்ப் நேற்று பேசியுள்ளார்.

நேற்று நியூயார்க்கில் உள்ள எக்கனாமிக் கிளப்பில் பேசும்போது, “நான் அதிபரானால் , பொருள்கள் மற்றும் சேவைகளை அமெரிக்காவிலேயே செய்யும் நிறுவனங்களுக்கு வரி குறைக்கப்படும்.

2022-ம் ஆண்டு நடந்த பல மோசடி மற்றும் முறையற்ற பரிவர்த்தனைகளால் சரியாக வரி கட்டுபவர்கள் பல நூறு பில்லியன் டாலர்கள் வரி கட்ட வேண்டியதாகி விட்டது. இது தொடரக்கூடாது. அதனால், இதை நடைமுறைப்படுத்த ஒரு கமிஷன் அமைக்கப்படும். இதற்கு தலைமை தாங்க எலான் மஸ்க் ஒப்புக்கொண்டுவிட்டார். இந்த கமிஷன் ஆறே மாதங்களில் மோசடிகளை தடுக்க நடவடிக்கை எடுக்கும்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 19-ம் தேதி எலான் மஸ்க் மற்றும் டிரம்ப் பங்கேற்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில், மஸ்க் இந்த கமிஷன் ஐடியா குறித்தும், தான் அதை தலைமை தாங்க விரும்புவதாகவும் கூறியிருந்தார்.

நேற்று ட்ரம்ப் கமிஷன் குறித்து பேசியப்பிறகு, எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில், “அமெரிக்காவுக்காக சேவைப்புரியும் வாய்ப்பு கிடைத்தால் எனக்கு மிக மகிழ்ச்சி. இதற்கென எனக்கு சம்பளம், பதவி, அங்கீகாரம்’ என எதுவும் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY