ஆசிரியர் தினத்தை முன்னிட்டு டாக்டர் ராதா கிருஷ்ணன் விருது வழங்கும் விழாவை பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்திருக்கிறது.
அந்த விழாவில் அமைச்சர் உதயநிதி கலந்துகொண்டார். அப்போது மாநில கல்வி மோசமாக உள்ளது என்று விமர்சித்திருந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுக்கும் வகையில் பேசியிருக்கிறார். இதுதொடர்பாக பேசியிருக்கும் அவர், “தமிழ்நாட்டு கல்விமுறை சரியில்லை என்று சிலர் அவதூறுப் பரப்புகிறார்கள். மாணவர்களை சுயமாக சிந்திக்க தூண்டும் கல்விமுறைதான் சிறந்த கல்விமுறை.
அந்த வகையில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சிந்திக்க வைக்கின்றன, ஏன், எதற்கு என பகுத்தறிவுடன் கேள்வி கேட்கின்ற கல்வி முறை உள்ளது. நம் தமிழ்நாட்டு பாடத் திட்டங்களைப் படித்த எத்தனையோ பேர் விஞ்ஞானிகள் ஆகி இருக்கிறார்கள். வீரமுத்துவேல் மாதிரி நிறைய பேர் இஸ்ரோவில் இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தமிழ்நாட்டின் கல்வி முறையை குறை சொல்வதை யாராலும் ஏற்க முடியாது. அப்படி குறை சொன்னால் அது நம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அவமதிப்பதற்கு சமம். யார் என்ன சொன்னாலும் தற்போது நம்முடைய சிலபஸ் படிக்கும் மாணவர்கள்தான் இன்னும் பல சாதனைகளைப் படைக்க உள்ளார்கள் என்பது உறுதி” என்று பேசியிருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், ” என்னுடைய துறை நிகழ்ச்சியை விட அன்பில் மகேஷின் துறை நிகழ்ச்சியில்தான் நான் அதிகம் கலந்துகொள்கிறேன். நான் எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் அங்கு ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து விடுவார். இந்த நிகழ்ச்சிக்காக எனக்கு அழைப்பு விடுத்தார். அப்போது, `எனக்கு காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆய்வு நிகழ்ச்சிகள் இருக்கிறது’ என்றேன்.
உடனே அவர், `அங்கேயே நிகழ்ச்சியை நடத்திவிடுகிறேன்’ என்றார். பெரும்பாலும் நானும் அவருடைய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வேன். இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ள ஆசிரியர்களுக்கு விளையாட்டுதுறை அமைச்சர் என்ற வகையில் கோரிக்கை ஒன்றை வைக்கிறேன். நீங்கள் இங்கு விருது பெறுவதுபோல நம் மாணவர்களும் விளையாடட்டில் பதக்கங்களை வெல்ல வேண்டும். அதனால் PT பீரியடை மட்டும் கடன் வாங்காதீர்கள்” என்று பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY