GOAT: “விஜய் படத்தின் தலைப்பில் ‘சனாதனம்’?” – பட தலைப்பை விமர்சிக்கும் எம்.பி ரவிக்குமார்

விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா ஆகியோர் நடித்து, வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் `The Greatest of All Time திரைப்படம்’ இன்று வெளியாகி உள்ளது.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்றக் கட்சிப் பெயரை அறிவித்தபோதே, ‘தமிழ்நாடு’ எனக் குறிப்பிடாமல் ‘தமிழக’ம் எனக் குறிப்பிட்டது விவாதமானது. அதைத் தொடர்ந்து, கட்சிக் கொடி, கட்சிப் பாடல் வெளியிட்டப் பின்பும் ‘கொடியில் யானை, தூங்குமூஞ்சி மரப் பூ’ என பல செய்திகள் விவாதிக்கப்பட்டது.

எம்.பி ரவிக்குமார்

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக கட்சியின் அதிகாரப்பூர்வ நடவடிக்கைகள் தொடங்கியப் பிறகு வெளியாகும் முதல் படம் கோட். திரைத் துறையைவிட்டு விலகி அரசியலில் முழு நேரம் ஈடுபடப் போவதாக நடிகர் விஜய் அறிவித்திருக்கும் நிலையில், கோட் படம் வெளியானது.

இதற்கிடையில்தான், நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்தும், தமிழக வெற்றிக் கழக மாநாடு குறித்தும் பல்வேறு விவாதங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த நிலையில், தி.மு.க-வின் கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், எம்.பி-யுமான ரவிக்குமார், தன் எக்ஸ் பக்கத்தில்,

“விஜய் படத்தின் தலைப்பில் ‘சனாதனம்’?…

The Greatest of all time என்பது ஒரு சனாதனக் கருத்தில்லையா?

‘காலமெல்லாம் பெரியது இதுதான்’ என்றால் காலம் மாறினாலும் இது மாறாது என்றுதானே அர்த்தம்!

‘என்றும் மாறாதது’ என்பதுதானே ‘சனாதனம்’ என்ற சொல்லின் பொருள்! இதைத் தெரிந்துதான் விஜய் படத்துக்குத் தலைப்பு வைத்தார்களா?

எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே (தொல்.சொல். 157)” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இது குறித்த உங்கள் கருத்து என்ன… கமெண்ட்டில் சொல்லுங்க…

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY