KANAVU: கன்னியாகுமரியில் இந்த தொழில் தொடங்கினால் Success | Suresh Sambandam

தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த.. நம் இளைஞர்களை தொழில்முனைவோராக மாற்றும் தொடராக இருக்கும்  கனவு- வளமும் வாய்ப்பும் தொடரில் கிஸ்ப்ளோ நிறுவனத்தின் நிறுவனர் சுரேஷ் சம்பந்தம் கன்னியாகுமரி மாவட்ட வளங்களைப் பற்றி பேசியபோது, 

“கன்னியாகுமரி மாவட்டம் கேரளப் பகுதியை ஒட்டி இருக்கக் கூடிய பகுதி. குமரி மாவட்ட பகுதியில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அதிகளவிலான மூலிகைகள் விளைகின்றன. ஆனால் அந்த மூலிகைகளெல்லாம் கேரளப் பகுதிகளுக்கு தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தின் வளங்களில்  முக்கியமானவையாக அரிய வகை மூலிகைகள் இருக்கின்றன. இந்த மூலிகைகளைப் பயன்படுத்தித் தான் கேரளாவில் ‘ கோட்டக்கால் ஆர்ய வைத்ய சால’, ‘ சோமதீரம் ஆராய்ச்சி நிலையம் மற்றும் மருத்துவமனை’ உள்ளிட்ட பல நிறுவனங்கள் கோடிக்கணக்கில் வருமானத்தை ஈட்டிக் கொண்டிருக்கின்றன. உலகத்தரம் வாய்ந்த ஒரு சித்த வைத்திய சாலையை நிறுவினால், ஆண்டுதோறும்  கோடிக்கணக்கான வருமானம் ஈட்ட முடியும். சித்த வைத்திய சாலை, பிளாக் பெப்பர் ஷாம்பு,  ரப்பர் மெட்ரேஸ் தொழிற்சாலை என பல்வேறு வளங்களைப் பற்றி விவரிக்கிறார். முழுமையான தகவல் கீழே வீடியோவில்…